They Call Him OG Pawan Kalyan
சினிமா

முதல் நாள் வசூலே இத்தனை கோடியா?.. பாக்ஸ் ஆஃபீஸில் கலக்கும் OG! | Pawan Kalyan | Sujeeth

ரிலீஸுக்கு ஒரு நாள் முன்பு திரையிடப்பட்ட வசூல் என்பது இந்திய அளவில் 21 - 23 கோடி வசூலித்துள்ளது என்றும் வெளிநாடுகளில் 26 கோடி வசூல் எனவும் சொல்லப்படுகிறது.

Johnson

பவன் கல்யாண் நடிப்பில் சுஜீத் இயக்கி செப்டம்பர் 25ம் தேதி வெளியான தெலுங்குப் படம் `They Call Him OG'. மிகப்பெரிய எதிர்பார்ப்புகள் இப்படத்தின் மீது இருந்ததால் ரிலீஸ் தேதிக்கு ஒரு நாள் முன்பே, அதாவது செப்டம்பர்  24ம் தேதி இரவு பல மாநிலங்களில் படத்தின் ப்ரீமியர் காட்சிகள் திரையிடப்பட்டது. இப்போது படம் வெளியாகி முதல் நாள் நிறைவடைந்துள்ள நிலையில் படம் மிகப்பெரிய வசூலை செய்துள்ளது. 

ரிலீஸுக்கு ஒரு நாள் முன்பு திரையிடப்பட்ட வசூல் என்பது இந்திய அளவில் 21 - 23 கோடி வசூலித்துள்ளது என்றும் வெளிநாடுகளில் 26 கோடி வசூல் எனவும் சொல்லப்படுகிறது. பிரீமியர் காட்சியில் இத்தகைய வசூல் மிகப்பெரியது. இதனைத் தொடர்ந்து படத்தின் முதல் நாள் வசூல் இந்திய அளவில் 70 கோடி என தோராயமாக சொல்லப்படுகிறது.

உலக அளவில் இப்படம் முதல் நாளில் 154 கோடி (GROSS) வசூல் செய்துள்ளது என அதிகாரப்பூர்வமாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் D V V Movies அறிவித்துள்ளது.

ரசிகர்களை கவரும் வகையில் பவன் கல்யாணின் மாஸ் படம் என்பதால், மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. பவனின் முந்தைய சில படங்கள் எதிர்பார்த்த வெற்றியை அடையாத நிலையில், இப்படம் பெரிய வரவேற்பையும், வசூலையும் பெற்றுள்ளது. தொடர்ந்து பார்வையாளர்களின் எண்ணிக்கை சிறப்பாக இருப்பதால், வசூலில் இன்னும் சாதனைகள் செய்ய வாய்ப்பு உள்ளது எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.