சினிமா

மீண்டும் தியேட்டரை சூறையாடிய பவன் கல்யாண் ரசிகர்கள்!

sharpana

தெலங்கானாவில் பவன் கல்யாண் நடித்த வக்கீல் சாப் திரைப்படத்தின் ஒளிபரப்பு பாதியிலேயே நிறுத்தப்பட்டதால் ரசிகர்கள் தியேட்டரை சூறையாடினர்.

நடிகர் அஜித்தின் 'நேர்கொண்ட பார்வை' படத்தின் தெலுங்கு ரீமேக்தான் இந்த வக்கீல் சாப். இதில் பவன் கல்யாண், அஞ்சலி, நிவேதா தாமஸ், பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படம் இன்று வெளியான நிலையில், தெலங்கானாவின் ஜகுலம்பா கத்வால் பகுதியிலுள்ள தியேட்டர் ஒன்றில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக படம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த பவன் கல்யாண் ரசிகர்கள், தியேட்டரை அடித்து நொறுக்கினர்.

ஏற்கனவே, ’வக்கீல் சாப்’ படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டின்போது தியேட்டரின் கண்ணாடி கதவுகளை உடைத்துக்கொண்டு ரசிகர்கள் நுழைந்த நிலையில் தற்போது மற்றொரு தியேட்டர் சூறையாடப்பட்டுள்ளது.