நேபாள நாட்டை சேர்ந்தவர் ஷர்மிளா தாபா. இவர் பிரபல காமெடி தொலைக்காட்சியின் மூலம் தொகுப்பாளினியாக அறிமுகமாகி, கடந்த 2019 உதவி நடன இயக்குனர் ரவி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
நடிகர் அஜித் படமான வேதாளம் மற்றும் விஸ்வாசம் ஆகிய படங்களிலும் ஜெயம் ரவி நடிப்பில் வந்த சகலகலாவல்லவன் படத்திலும் நடித்து, பிரபல சின்னத்திரை நிகழ்ச்சிகள் பலவற்றிலும் நகைச்சுவை கதாப்பத்திரத்திலும் நடித்து வந்தார். இவர்மீதுதான் தற்போது சென்னை வெளிநாட்டவர் மண்டல பதிவு அலுவக அதிகாரிகள் சென்னை மத்திய குற்றப்பிரிவில் புகார் ஒன்றினை அளித்துள்ளார்.
பாஸ்போர்ட் விண்ணப்பத்திற்கு அளித்த முகவரி தொடர்பாக முறைகேடு செய்திருப்பதாக கூறி புகார் மனு ஒன்று இவர்மீது கொடுக்கப்பட்டுள்ளது .
அந்த புகாரின்படி,
10 ஆண்டுகளாக அண்ணா நகர் பகுதியில் வசித்துவந்த இவர், முதலில் இந்தியா பாஸ்போர்ட்டில் அவரது அண்ணாநகர் முகவரியை கொடுத்துள்ளார். தற்பொழுது பாஸ்போர்ட் காலவதியானநிலையில், மீண்டும் புதுப்பிப்பதற்காக விண்ணப்பத்தில் வியாசர்படி முகவரியை கொடுத்துள்ளார்.
இதுகுறித்து விசாரணை நடத்தியபோதுதான், அவர் பெரம்பூரில் வசித்து வந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. இந்நிலையில்தான், இவர்மீது தற்போது மத்திய உள்துறை அமைச்சகத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், நேபாளா நாட்டைச் சேர்ந்தவர் ரேஷன் கார்டு, ஆதார் கார்டு உள்ளிட்ட பாஸ்போர்ட்டுக்கு தேவையான அனைத்து ஆவணங்களையும் போலியாக கொடுத்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில், நேபாள நாட்டைச் சேர்ந்த ஷர்மிளா தாபா இந்திய குடியுரிமை பெற்றது எப்படி? , ஆதார் உள்ளிட்ட இந்திய ஆவணங்கள் அவருக்கு வழங்கப்பட்டது எப்படி என கேள்வி எழுந்தது. இது தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து மோசடி மற்றும் பாஸ்போர்ட் சட்டம், உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.