நடிகை பார்வதி சம்பந்தமான சர்ச்சைக்கு மலையாள நடிகர் மம்முடி முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
கேரளா நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் நடிகை பார்வதி கலந்து கொண்டார். அப்போது மம்முட்டி நடிப்பில் வெளியான கசாபா படத்தை பற்றி பேசினார். அந்தப் படத்தில் மம்மூட்டி பெண்களுக்கு எதிராக பேசியுள்ள வசனங்கள் வருத்தம் அளிப்பதாக கூறியிருந்தார். மலையாளத்தில் மிகப்பெரிய நடிகராக இருந்து கொண்டு இந்த வயதில் இப்படி செய்யலாமா என்று கேள்வி எழுப்பினார். இவரது பேச்சு மலையாள மம்முட்டி ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பானது. பார்வதியை வசை சொற்களால் ரசிகர்கள் திட்டித் தீர்த்தனர். மேலும் தாங்கள் விரும்பும் நடிகைரை பற்றி கலங்கமாக பேசியதற்காக சிலர் கொலை மிரட்டல் விடுத்தனர். இத்தனை சர்ச்சையையும் மிக மெளனமாக கவனித்து கொண்டு வந்தார் மம்முட்டி. அவர் இதுகுறித்து பேசாதது குறித்து ஊடங்கள் கேள்வி எழுப்பினர். பொறுத்து பார்த்த நடிகை பார்வதி இறுதியில் காவல்நிலையத்திற்கு சென்று புகார் அளித்தார். இவரின் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் இதுவரை 2 பேரை கைது செய்துள்ளனர்.
இந்நிலையில் நடிகர் மம்முட்டி தனது மெளனத்தை கலைத்து விளக்கம் அளித்துள்ளார். மலையாள ஊடகத்தை சந்தித்த அவர், “பார்வதி ஏற்கெனவே என்னிடம் பேசிவிட்டார். இந்த சர்ச்சைகளை எல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று பார்வதிக்கு ஆறுதல் கூறினேன். என் சார்பில் பேசுமாறு நான் யாரையும் கேட்டுக் கொள்ளவில்லை” என்றார். மம்முட்டியின் விளக்கம் குறித்து, “இந்த விஷயத்தில் மம்மூட்டி இஷ்டத்திற்கே விட்டுவிடுகிறேன். அவர் ஆரம்பத்திலேயே பேசியிருக்க வேண்டும். தற்போது விளக்கம் அளித்தது பரவாயில்லை” என்று பார்வதி தெரிவித்துள்ளார்.