பிரபல இந்தி நடிகர் ரன்வீர் சிங், அலியா பட் ஆகியோருடன் விஜய் சேதுபதி இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிரபல இந்தி நடிகர் ரன்வீர் சிங், அவர் மனைவியும் நடிகையுமான தீபிகா படுகோன், நடிகை அலியா பட், நடிகர்கள் அயுஷ்மன் குரானா, மனோஜ் பாஜ்பாய் ஆகியோருடன் தென்னிந்திய நடிகர்கள் விஜய் தேவரகொண்டா, விஜய் சேதுபதி, நடிகை பார்வதி ஆகியோர் ஒன்றாக இருக்கும் புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
மும்பையில் பிரபல மீடியா ஒன்றின் டிஜிட்டல் விருது வழங்கும் நிகழ்ச்சி நேற்று முன் தினம் இரவு நடந்தது. அதில் இவர்கள் கலந்துகொண்டபோது, இந்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சிக்கு முன் அவர்கள் சினிமா பற்றி விவாதித்தனர். இதில் இந்திப் பட தயாரிப்பாளரும் இயக்குநருமான கரண் ஜோஹர் உட்பட மேலும் பல இந்தி பிரபலங்களும் கலந்துகொண்டனர்.