சினிமா

தனுஷுடன் இணையும் மாரி செல்வராஜ்

தனுஷுடன் இணையும் மாரி செல்வராஜ்

webteam

‘பரியேறும் பெருமாள்’ படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிக்கவுள்ளார்.

நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குநர் வெற்றிமாறன் எடுத்த ‘வடசென்னை’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகியது. இதைத்தொடர்ந்து ‘மாரி 2’, ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ ஆகிய படங்கள் திரைக்கு வர தயாராகவுள்ளது. மேலும், ‘வடசென்னை 2’ பாகத்திற்கு முன் வெற்றிமாறனின் இயக்கத்தில் வேறு ஒரு கதையில் தனுஷ் நடிக்க இருக்கிறார். இதற்கிடையில் ‘ராட்ச்சசன்’ இயக்குநரின் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க இருக்கிறார். 

இன்னொரு புறம் ‘பா.பாண்டி’ படத்தின் 2வது பாகத்தை தனுஷே இயக்கும் வேலைகளும் நடைபெற்று வருகின்றன. இதுபோக, தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்திற்காக ஒரு படத்தை தனுஷ் இயக்கவுள்ளார். இந்நிலையில், ‘பரியேறும் பெருமாள்’ மூலம் சினிமா உலகில் இயக்குநராக தடம் பதித்த மாரி செல்வராஜ் உடன் ஒரு புதிய படத்தில் தனுஷ் இணைய இருக்கிறார். இதுகுறித்து ட்விட்டர் பக்கத்தில் நடிகர் தனுஷ் பதிவிட்டுள்ளார். 

அதில், “ஒருவழியாக பரியேறும் பெருமாள் பார்த்துவிட்டேன். நெஞ்சம் உருகிவிட்டது. வாழ்வின் எதார்த்தத்தை தத்ரூபமாக இப்படம் பிரதிபலித்துள்ளது. நாம் படத்திற்குள் இருப்பது போல் உணர்கிறோம். படக்குழுவிற்கு எனது வாழ்த்துகள். மாரி செல்வராஜின் அடுத்த படத்தில் நான் நடிக்கவுள்ளேன். வி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகும் அப்படத்தில் மாரி செல்வராஜ் போன்ற திறமையானவருடன் பணியாற்றுவதற்காக உற்சாகமாவுள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.