சினிமா

அனுஷ்கா கோலி பயமுறுத்தும் ‘பரி’

அனுஷ்கா கோலி பயமுறுத்தும் ‘பரி’

webteam

காதலர்களாக இருந்த அனுஷ்கா ஷர்மா -விராட் கோலி ஜோடி கடந்த ஆண்டு திருமண பந்தத்தில் இணைந்தனர். இதனையடுத்து தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 வடிவிலான போட்டிகளில் விளையாடி வருவதால். அனுஷ்காவும் கோலியுடன் பயணப்பட்டார். தென்னாப்பிரிக்காவின் கேப்டவுன் தண்ணீர் தட்டுப்பாட்டில் தவிக்க. இந்தஜோடி கேப்டவுண் கடற்கரையில் தங்கள் பொழுதை கழித்தனர். கோலியும் ட்விட்டரில் காதல் மழை பொழிந்து வந்தார். இதன்பின் விராட் தனது கிட் பேக்கை தூக்கிக்கொண்டு களத்திற்கு திரும்ப, அனுஷ்கா தனது மேக்அப் கிட்டுடன் படப்பிடிப்பிற்கு கிளம்பிவிட்டார்.


ஷாருக்கானுடன் ஜீரோ என்ற படத்தில் அனுஷ்கா ஷர்மா நடித்து வருகிறார். இந்நிலையில் தனது சொந்த பட கம்பெனியான ‘க்ளீன் ஸ்டேல்’ எண்டர்டெயின்மென்ட்ஸ் சார்பில் ‘பரி’ என்ற படத்தை தயாரித்து வருகிறார். திகில் படமான இதனை  ப்ரோசித் ராய் இயக்குகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் படத்தின் போஸ்டர் வெளியாகி இருந்த நிலையில் தற்போது ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. ட்ரெய்லருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. 'என்.ஹெச்-10', 'ஃபில்லௌரி' ஆகிய படங்களை அனுஷ்கா ஏற்கனவே தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது