சினிமா

பாடகி பரவை முனியம்மா மருத்துவமனையில் அனுமதி

பாடகி பரவை முனியம்மா மருத்துவமனையில் அனுமதி

Rasus

மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பாடகி பரவை முனியம்மா அனுமதிக்கப்பட்டுள்ளார்.

84 வயதாகும் பாடகி பரவை முனியம்மா, கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். சிறுநீரகம் தொடர்பான பிரச்னையால் பாதிக்கப்பட்ட அவர் ஏற்கெனவே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

தற்போது மூச்சுத் திணறல் காரணமாக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பரவை முனியம்மா மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சையளித்து வருகின்றனர்.