சினிமா

சரவணா ஸ்டோர் அதிபருடன் இணைந்து நடிக்கும் ஓவியா!

சரவணா ஸ்டோர் அதிபருடன் இணைந்து நடிக்கும் ஓவியா!

webteam

பிக்பாஸ் மூலம் புகழ்பெற்ற ஓவியா சரவணா ஸ்டோர் விளம்பரத்தில் அதன் உரிமையாளர் சரவணன் அருளுடன் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. 

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ஓவியா லட்சக்கணக்கான ரசிகர்களை பெற்றுள்ளார். இதனையடுத்து அவரை தங்களது படங்களில் நடிக்க வைக்க தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால் அவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு எந்தப்படத்தையும் ஒப்புக்கொண்டதாக தெரியவில்லை. 


சரவணா ஸ்டோர் அதிபர் சரவணன் அருள், அவரது கடை தொடர்பான விளம்பரங்களில் நடித்து வருகிறார். அவருடன் ஹன்சிகா மோத்வானி தமன்னா இணைந்து நடித்த விளம்பரம் மிகவும் பிரபலமானது. அந்த விளம்பரங்கள் தொடர்ச்சியாக தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில் அடுத்த சரவணா ஸ்டோர் விளம்பரத்தில் அதன் உரிமையாளர் சரவணன் அருளுடன் இணைந்து ஓவியா நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதனால் இந்த விளம்பரம் மக்களின் கவனத்தை ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.