சினிமா

ஓவியாவின் ’ஷட் அப் பண்ணுங்க’ பாடலானது எப்படி?

ஓவியாவின் ’ஷட் அப் பண்ணுங்க’ பாடலானது எப்படி?

webteam

ஜெய்-அஞ்சலி ஜோடியாக நடிக்கும் படம், ’பலூன்’. சினிஷ் இயக்குகிறார். யுவன் ஷங்கர் ராஜா இசை அமைக்கிறார். இதில் ஒரு பாடலை அனிருத் பாடியுள்ளார். பிக்பாஸில் ஓவியா சொன்ன வார்த்தை ’ஷட் அப் பண்ணுங்க’. இதை கொண்டே உருவாக்கி இருக்கும் பாடலைதான் பாடியிருக்கிறார் அனிருத். 
இந்தப் பாடல் எப்படி உருவானது என்பது பற்றி இயக்குனர் சினிஷ் கூறும்போது, 
'படத்தின் ஒரு பாடலுக்கான விவாதத்தில் நானும் பாடலாசிரியரும் இருந்தபோது, ஓவியாவின் பிரபலமான 'நீங்க ஷட் அப் பண்ணுங்க' என்ற வரி தோன்றியது. இந்த யோசனையை, யுவனிடம் சொன்னதும் அவருக்கும் பிடித்தது. பிறகு இந்தப் பாடலை அனிருத் பாடினால் அசத்தலாக இருக்கும் என்றார். அனிருத்திடம் சொன்னதும் சம்மதித்தார். இருவரும் பாடலை பிரமாதமாக உருவாக்கியுள்ளனர். இந்த பாடல் கண்டிப்பாக மெகா ஹிட்டாகும். பாடலின் ப்ரமோ, வரும் 29 ஆம் தேதி வெளியாகிறது’ என்றார்.