பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள ஆரவ் நடித்துள்ள மீண்டும் வா அருகில் வா படத்தின் டீசர் இன்று வெளியாகி இருக்கிறது
1991-ம் ஆண்டு வெளிவந்த ஹாரர் திரைப்படம், 'வா அருகில் வா'. அந்தப் படத்தில் அடுத்த பாகமாக 'மீண்டும் வா அருகில் வா' படத்தை உருவாக்கி இருக்கிறார்கள். இந்தப் படத்தில் 'கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்' படத்தில் நடித்த சந்தோஷும், பிக்பாஸ் போட்டியாளர் ஆரவ்வும் இணைந்து நடித்துள்ளனர். ஜெ.ஜெய ராஜேந்திர சோழன் இயக்கியுள்ள இந்தப் படத்தில் நடிகை சாரா தேவா, உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். பிக்பாஸ் போட்டியில் பங்கேற்றுள்ள ஆரவ் நடித்துள்ளதால் இப்படம் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த நிகழ்ச்சியில் ஓவியாவின் தோழனாக அறியப்படும் ஆரவ் 300க்கு மேற்பட்ட்ட கமர்சியல் மற்றும் பிரிண்டிங் விளம்பரங்களில் மாடலாக நடித்துள்ளார். விஜய் ஆண்டனியின் சைத்தான் படத்திலும் நடித்துள்ளார்.