ஓவியா நடிக்கும் ‘90எம்.எல்’படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை படக்குழு வெளியிட்டுள்ளது.
விரைவில் சிம்புவும் ஓவியாவும் இணைந்து ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக செய்தி பரவியது. பிறகு அது உண்மையில்லை, வதந்தி என விளக்கம் தரப்பட்டது. இந்நிலையில் அந்தப் படத்திற்கான அறிவிப்பு முறையாக இப்போது வெளியாகியுள்ளது. இதில் ஓவியா நடிப்பது உறுதி. ஆனால் சிம்பு நடிக்கவில்லை, இசையமைக்கிறார்.
இயக்குநர் அனிதா இயக்கும் இந்தப் படத்தில் ஓவியா நடிக்கிறார். இப்படத்தை ‘என்விஸ் எண்டர்டெய்ன்மெண்ட்’ தயாரிக்கிறது. இதற்கு ‘90 எம்.எல்’ என தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. இதற்கான ஃபர்ஸ்ட் லுக்கை தனது ட்விட்டர் பக்கத்தில் அனிதா உதிப் வெளியிட்டுள்ளார். மேலும் அவர். “ நான் மிக மகிழ்ச்சியாக ‘90 எம் எல்’ பட ஃபர்ஸ்ட் லுக்கை பகிர்ந்து கொள்கிறேன். படத்திற்கு சிம்பு இசையமைக்கிறார். அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்கிறார். எடிட்டராக ஆண்டனி பணி புரிகிறார்.” என தெரிவித்திருக்கிறார்.