சினிமா

’வாரிசு’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் காப்பி அடிக்கப்பட்டதுதானா? - Otto நிறுவனம் என்ன சொல்கிறது?

JananiGovindhan

நடிகர் விஜய்யின் 48வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது 66வது படத்துக்கான டைட்டிலுடன் கூடிய போஸ்டர்களை படக்குழு வெளியிட்டிருந்தது.

‘வாரிசு’ தலைப்பிடப்பட்டிருக்கும் விஜய்யின் 66வது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான போது, அது வழக்கம் போல வேறோ எதோ ஒரு படத்தில் இருந்து காப்பி அடிக்கப்பட்டதுதான் எனக் குறிப்பிட்டும், அதனை உடனடியாக decode-ம் செய்து சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் வைரலாக்கினர்.

அதில், வாரிசு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் The Boss Returns என்ற byline உடன் இடம்பெற்ற கோட் சூட் போட்ட விஜய்யின் தோற்றம் மற்றும் அதன் பின்னணி எல்லாம் துல்கர் சல்மான் நடித்த ஓட்டோ நிறுவனத்தின் விளம்பரத்தை பார்த்து காப்பி அடித்திருப்பதாக பதிவிட்டு வந்தனர்.

இதுபோக, கண் தொடர்பான நிறுவனத்திற்கான புகைப்படத்தை எடுத்து background படமாக வாரிசு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு பயன்படுத்தியிருக்கிறார்கள் எனவும் படக்குழுவை விமர்சித்திருக்கிறார்கள்.

இந்த நிலையில், வாரிசு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் காப்பி அடிக்கப்பட்டதா என தொடர்ந்து எழுப்பப்பட்டு வந்த கேள்விக்கு ஓட்டோ நிறுவனமே விளக்கமளித்துள்ளது.

இது தொடர்பாக ஓட்டோ நிறுவனத்தின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைரலாக்கப்படும் ஓட்டோ விளம்பர போஸ்ட் மற்றும் வாரிசு போஸ்டரை இணைத்து, “எங்களுடையே அனைத்து விளம்பரங்களுமே அசலாகத்தான் இருக்கும். வாரிசு பட போஸ்டர் ஓட்டோவின் விளம்பரத்துடன் தொடர்புடையது அல்ல.

சில மீம் கிரியேட்டர்களால் பொழுதுபோக்குக்காக உருவாக்கப்பட்டிருக்கிறது. வாரிசு படக்குழுவுக்கு எங்கள் தரப்பிலிருந்து வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்” எனக் குறிப்பிட்டு சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருக்கிறது.

ALSO READ: