இந்த வார ஓடிடி, தியேட்டர் லிஸ்ட் pt web
ஓடிடி திரைப் பார்வை

King & Conqueror முதல் The Roses வரை.. இந்த வார ஓடிடி, தியேட்டர் லிஸ்ட் இதோ..!

King & Conqueror முதல் The Roses வரை.. இந்த வார ஓடிடி, தியேட்டர் லிஸ்ட் இதோ..!

Johnson

இந்த வாரம் ஓடிடி மற்றும் தியேட்டர்களில் பல்வேறு மொழிகளில் பல சுவாரஸ்யமான படங்கள் மற்றும் சீரிஸ் வெளியாகின்றன. 'King & Conqueror' முதல் 'The Roses' வரை, த்ரில்லர், காதல், மர்மம் என பல வகை படைப்புகள் ரசிகர்களை கவரவிருக்கின்றன. ஒவ்வொரு படைப்பும் தனித்துவமான கதைக்களத்துடன் வருகிறது.

Series

King & Conqueror (English) Jio Hotstar - Aug 25

King & Conqueror

Michael Robert Johnson உருவாக்கியுள்ள சீரிஸ் `King & Conqueror'. 11 நூற்றாண்டில் நடக்கும் அதிகார போட்டியே கதைக் களம்.

Upload (English) Prime - Aug 25

Upload

புகழ்பெற்ற சைன்ஸ் ஃபிக்ஷன் சீரிஸ் Upload. இதன் கடைசி சீசன் வெளியாகி இருக்கிறது.

Sambhava Vivaranam Nalarasangham (Malayalam) SonyLIV - Aug 29

Sambhava Vivaranam Nalarasangham

க்ரிஷாத் இயக்கியுள்ள சீரிஸ் `Sambhava Vivaranam Nalarasangham'. உள்ளூர் திருவிழாவை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவர நினைக்கும் ஐந்து நபர்களில் கதை.

Shodha (Kannada) Zee5 - Aug 29

Shodha

சுனில் இயக்கத்தில் பவன்குமார் நடித்துள்ள சீரிஸ் `Shodha'. தன்னுடைய மனைவியை அடையாளம் கண்டுகொள்ள முடியாத கணவன் பற்றிய கதை.

OTT

The Thursday Murder Club (English) Netflix - Aug 28

The Thursday Murder Club

கிறிஸ் கொலம்பஸ் இயக்கியுள்ள படம் `The Thursday Murder Club'. வயதான நால்வர் இணைந்து பொழுது போக்காக, மர்மமான கொலை குற்ற வழக்குகளை தீர்க்கிறார்கள். அப்படி அவர்கள் பின் தொடரும் வழக்கே கதை.

Songs of Paradise (Hindi) Prime - Aug 29

Songs of Paradise

Danish Renzu இயக்கியுள்ள படம் `Songs of Paradise'. காஷ்மீரை சேர்ந்த பாடகி நூர் பேகமின் பயோபிக்காக உருவாகியுள்ளது படம்.

Post Theatrical Digital Streaming

Maayakoothu (Tamil) Sun NXT - Aug 27

Maayakoothu

ராகவேந்திரா இயக்கிய படம் `மாயக்கூத்து'. ஒரு எழுத்தாளனின் கதாப்பாத்திரங்கள் அவனையே எதிர்க்க துவங்குகிறது. அதன் பின் நடப்பவையே கதை.

Gevi (Tamil) Sun NXT - Aug 27

Gevi

தமிழ் தயாளன் இயக்கிய படம் `கெவி'. கிராமம் ஒன்றில் நடக்கும் சர்வைவல் த்ரில்லரே களம்.

Kingdom (Telugu) Netflix - Aug 27

Kingdom

கௌதம் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடித்த படம் `Kingdom'.  ஒரு அண்டர்கவர் ஏஜென்ட் பற்றிய கதை.

Thunderbolts (English) Jio Hotstar - Aug 27

Thunderbolts

Jake Schreier இயக்கிய படம் `Thunderbolts*'. ஒரு மோசமான மிஷனை முடிக்க கிளம்பும் குழுவின் கதை.

Metro… In Dino (Hindi) Netflix - Aug 29

Metro… In Dino

அனுரங் பாசு இயக்கத்தில் ஆதித்யா ராய் கபூர், சாரா அலிகான் நடித்த படம் `Metro... In Dino'. இது அனுரங் பாசு இயக்கத்தில் 2007ல் வெளியான Life in a... Metro படத்தின் சீக்குவலாக உருவாகியுள்ளது. 

Karate Kid: Legends (English) Netflix - Aug 30

Karate Kid: Legends

Jonathan Entwistle இயக்கத்தில் ஜாக்கி சான் நடித்த படம் `Karate Kid: Legends'. கராத்தே போட்டிகளில் Li Fong எப்படி ஜெயிக்கிறான் என்பதே கதை.

Theatre

Hridayapoorvam (Malayalam) - Aug 28

Hridayapoorvam

சத்யன் அந்திக்காட் இயக்கத்தில் மோகன்லால் நடித்துள்ள படம் `Hridayapoorvam'. தனக்கு இதய தானம் அளித்தவரின் வீட்டுக்கு செல்லும் ஹீரோ, அங்கு தங்கும்படி ஆகிறது. அதன் பின் நடப்பவையே கதை.

Lokah Chapter 1: Chandra (Malayalam) - Aug 28

Lokah Chapter 1: Chandra

டோமினிக் அருண் இயக்கத்தில் கல்யாணி பிரியதர்ஷன், நஸ்லென் நடித்துள்ள படம் `Lokah Chapter 1: Chandra'. மூன்று நண்பர்களுக்கு புதிதாக பரிட்சயம் ஆகும் மர்மமான பெண்ணைப் பற்றிய கதை.

Kuttram Pudhithu (Tamil) - Aug 29

Kuttram Pudhithu

நோவா ஆம்ஸ்ட்ராங் இயக்கியுள்ள படம் `குற்றம் புதிது'. கொலை செய்யப்பட்டதாக சொல்லப்படும் ப்ரீத்தி, ஐந்தாண்டுகளுக்கு பின் திரும்பி வருகிறார். அதன் பின் நடப்பவையே கதை.

Kadukka (Tamil) - Aug 29

Kadukka

முருகரசு இயக்கியுள்ள படம் `கடுக்கா'. ஒரு பெண்ணை இருவர் நேசிக்க, அதனால் நடக்கும் மோதல்களே கதை.

Sotta Sotta Nanaiyuthu (Tamil) - Aug 29

Sotta Sotta Nanaiyuthu

நவீத் இயக்கியுள்ள படம் `சொட்ட சொட்ட நனையிது'. வழுக்கை தலை பிரச்சனை கொண்ட ஹீரோ சந்திக்கும் சவால்கள் கதை.

Pei Kathai (Tamil) - Aug 29

Pei Kathai

ஜேன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் `பேய் கதை'. நண்பர்கள் குழு ஒன்றி அமானுஷ்யமான இடத்தில் மாட்டிக் கொள்வதே கதை.

Gift (Tamil) - Aug 29

Gift

பாண்டியன் இயக்கத்தில் சோனியா அகர்வால் நடித்துள்ள படம் `கிப்ட்'. கொடைக்கானலில் நடக்கும் ஒரு கொலையை விசாரிக்கும் பெண் காவலதிகாரியின் கதை.

Naruvee (Tamil) - Aug 29

Naruvee

சுபாரக் இயக்கியுள்ள படம் `நறுவி'. காட்டுக்குள் பயணம் செல்லும் நண்பர்களின் கதை.

Veera Vanakkam (Tamil) - Aug 29

Veera Vanakkam

அனில் நாகேந்திரன் இயக்கியுள்ள படம் `Veera Vanakkam'. கம்யூனிஸ்ட் போராளி கிருஷ்ணன் பிள்ளையின் வாழ்க்கை வரலாறு தான் கதை.

Arjun Chakravarthy (Telugu) - Aug 29

Arjun Chakravarthy

விக்ராந்த் இயக்கியுள்ள படம் `Arjun Chakravarthy'. கபடி வீரரான அர்ஜூன் சக்ரவர்த்தியின் பயோபிக் இது.

Odum Kuthira Chaadum Kuthira (Malayalam) - Aug 29

அல்தாஃப் சலீம் இயக்கத்தில் பகத் பாசில், கல்யாணி ப்ரியதர்ஷன் நடித்துள்ள படம் `Odum Kuthira Chaadum Kuthira'. பழைய மற்றும் புதிய வாழ்க்கை ஒரே சமயத்தில் இரு நபர்கள் ரூபத்தில் வர, ஹீரோவுக்கு வரும் சிக்கல்களே கதை.

Param Sundari (Hindi) - Aug 29

Param Sundari

துஷார் இயக்கத்தில் சித்தார்த் மல்ஹோத்ரா - ஜான்வி கபூர் நடித்துள்ள படம் `Param Sundari'. இந்தி இளைஞனுக்கு கேரளா பெண் மீது காதல் ஏற்பட, அதன் பின் நடப்பவையே கதை.

The Roses (English) - Aug 29

The Roses

Jay Roach இயக்கத்தில் Benedict Cumberbatch, Olivia Colman நடித்துள்ள படம் `The Roses'. கணவன் - மனைவிக்குள் ஏற்படும் விரிசலே கதை.