இந்த வாரம் ஓடிடி மற்றும் தியேட்டர்களில் பல புதிய படங்கள் மற்றும் சீரிஸ்கள் வெளியாகின்றன. `Nobody 2' படத்தில் ஹட்ச் குடும்பத்துடன் ஹாலிடே செல்லும் போது எதிர்கொள்ளும் சிக்கல்கள் கதை. `தலைவன் தலைவி' படத்தில் விஜய் சேதுபதி, நித்யா மேனன் நடிப்பில் கணவன் மனைவிக்கிடையேயான மோதல்கள் கதைக்களமாக அமைந்துள்ளது.
K.J. Steinberg உருவாக்கியுள்ள சீரிஸ் `The Twisted Tale of Amanda Knox'. தன் ரூமேட் கொலைவழக்கில் தவறாக கைது செய்யப்பட அமண்டா சந்திக்கும் போராட்டங்களே கதை.
Matt Charman உருவாக்கியுள்ள சீரிஸ் `Hostage'. ப்ரைம் மினிஸ்டர் கடத்தப்பட, அதை தொடர்ந்து நடக்கும் அரசியல் ஆட்டங்கள் கதை.
சுனில் இயக்கத்தில் பவன்குமார் நடித்துள்ள சீரிஸ் `Shodha'. தன்னுடைய மனைவியை அடையாளம் கண்டுகொள்ள முடியாத கணவன் பற்றிய கதை.
James Gunn உருவாக்கத்தில் வரும் சீரிஸ் `Peacemaker season 2'. சூப்பர்ஹீரோ பேஸ்மேக்கர் இம்முறை சந்திக்கும் பிரச்சனைகளே கதை.
நடிகை Shawn Simmons இயக்குநராக அறிமுகமாகி, தானே நடித்துள்ள படம் `Eenie Meanie'. Getaway driver வாழ்க்கையில் வரும் பிரச்சனையும், அதை சரி செய்யும் முயற்சிகளும் கதை.
பவன் கல்யாண் நடித்த படம் `Hari Hara Veera Mallu'. முகலாயர்களை எதிர்த்து போராடும் கலகக்காரரின் கதை.
பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நித்யா மேனன் நடித்த படம் `தலைவன் தலைவி'. கணவன் மனைவிக்கு இடையே வரும் மோதல்களே கதைக்களம்.
சுதீஷ் ஷங்கர் இயக்கத்தில் வடிவேலு, ஃபகத் பாசில் நடித்த படம் `மாரீசன்'. வேலாயுதத்திடம் உள்ள பணத்தை திருட, தயா நல்லவன் போல அவருடன் பயணிக்கிறான். இந்தப் பயணத்தில் நடப்பவையே கதை.
பிரவீனா பருச்சுரி இயக்கிய படம் `Kothapallilo Okappudu'. ராமகிருஷ்ணா என்ற இளைஞரின் வாழ்க்கை பயணமே கதை.
சென்ற ஆண்டு வெளியான `ஷைத்தான்' படத்தின் ஸ்பின் ஆஃப் ஆக உருவான படம் `Maa'. சந்திரபூர் என்ற கிராமத்தில் நடக்கும் அமானுஷ்யங்கள் பற்றிய படம்.
சபரீஷ் இயக்கத்தில் வசந்த் ரவி நடித்துள்ள படம் `இந்திரா'. பார்வையை இழந்த காவலர் ஒருவர், சீரியல் கில்லர் வழக்கில் என்ன செய்கிறார் என்பதே கதை.
பிரவீன் இயக்கத்தில் அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ள படம் `Paradha'. கிராமத்தில் இருக்கும் பெண் ஒருவரை, நகரத்தில் இருந்து வரும் இரு பெண்கள் சந்தித்த பின் நடப்பவையே கதை.
விபின் இயக்கியுள்ள படம் `Meghaalu Cheppina Prema Katha'. வருண் - மேக்னா இருவரின் காதலே கதை.
David Mackenzie இயக்கியுள்ள படம் `Relay'. பொருளாதார குற்றங்களை மையப்படுத்திய த்ரில்லர் படம்.
Timo Tjahjanto இயக்கத்தில் Bob Odenkirk நடித்துள்ள படம் `Nobody 2'. மாணிக்கமாக அமைதி காக்கும் ஹட்ச், பாட்ஷாவாக மாஸ் காட்டியது முதல் பாகம். இம்முறை குடும்பத்துடன் ஹாலிடே செல்லும் ஹட்சுக்கு வரும் சிக்கல்களே கதை.