வாரம் தோறும் புதுப் புது குறும்படங்கள் தொடர்ச்சியாக Kadha Sudhaவில் வெளியாகிறது. இந்த வாரம் ‘Life Partner’ and ‘Uttaram’ ஆகிய இரு குறும்படங்கள் வெளியாகியுள்ளது.
Charlie Brooker உருவாக்கிய சீரிஸ் Black Mirror. சைன்ஸ் ஃபிக்ஷன் சீரிஸான இதன் ஏழாவது சீசன் வருகிறது.
விஷால் இயக்கத்தில் 2021ல் வெளியான படம் `Chhorii'. தற்போது அதே இயக்குநர் இதன் இரண்டாம் பாகத்தை இயக்கியிருக்கிறார். சென்ற பாகத்தில் கர்ப்பிணியாக இருந்த சாக்ஷி, எப்படி தன்னையும், பிறக்கப் போகும் தன் குழந்தையையும் காப்பாற்ற போராடுவார். இம்முறை ஏழு வயதான தன் குழந்தையை காக்க போராடுவதே கதை.
சிங்கள மொழிப் படமான Tentigo படத்தை அதே இயக்குநர் இளங்கோ ராம் தமிழில் ரீமேக் செய்த படம் தான் `பெருசு’. வீட்டில் ஒரு இறப்பு நிகழ, அதைத் தொடர்ந்து நடக்கும் ஒரு சம்பவம், அதை சுற்றிய கலாட்டாக்களுமே கதை.
ராம் ஜெகதீஷ் இயக்கிய படம் `Court State vs A Nobody'. 19 வயது சிறுவன் மேல் பல்வேறு வழக்குகள் சுமத்தப்படுகிறது, அதில் போக்சோ குற்றமும் உண்டு. இதன் பின் என்ன ஆகிறது என்ற சட்ட போராட்டமே கதை.
ஸ்ரீஜித் பாபு இயக்கத்தில் சஜின், அனஸ்வரா நடித்த படம் `Painkili’. சுகு என்ற இளைஞனின் வாழ்வில் உள்ள பிரச்சனைகள் பற்றிய கதை.
செளபின் சாஹிர், பேசில் ஜோசப் நடித்த படம் ` Pravinkoodu Shappu'. சாராய கடை ஒன்றில் 11 பேர் கொண்ட குழு, குடியும் சீட்டாட்டமுமாக இரவை கழிக்கிறது. அதே கடையின் ஓனர் தூக்கில் தொங்கி இறந்து கிடப்பது தெரிந்த பின் என்ன நடக்கிறது என்பதே கதை.
கோவிந்த் விஷ்ணு இயக்கத்தில் ஆண்டனி வர்கீஸ் நடித்த படம் `Daveed’. பவுன்சராக பணியாற்றும் முன்னாள் பாக்ஸர் பற்றிய கதை.
லக்ஷ்மன் உடேகர் இயக்கத்தில் விக்கி கௌஷல், ராஷ்மிகா மந்தனா நடித்த படம் `Chhaava’. சத்ரபதி சிவாஜியின் மகன், சத்ரபதி சம்பாஜி மஹாராஜின் கதை.
அஜித் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள படம் `குட் பேட் அக்லி'. தன் மகனுக்காக, கேங்ஸ்டர் தொழில் இருந்து விலகி இருந்த ஹீரோ, மீண்டும் தன் மகனுக்காகவே களத்தில் இறங்குவதே கதை.
பொம்மரில்லு பாஸ்கர் இயக்கத்தில் சித்து நடித்துள்ள படம் `Jack'. தீவிரவாதி ஒருவனை பிடிக்கும் முயற்சிக்கு நடுவே, ஹீரோ என்ன செய்கிறார் என்பதே கதை.
மம்மூட்டி, கௌதம் மேனன் நடிப்பில் டீனோ டென்னிஸ் இயக்கியுள்ள படம் `Bazooka'. போலீசும், தொழிலதிபரும் சைக்கோ கொலைகாரனை பிடிக்க ஒரு மிஷனில் இணைவதே கதை.
சிஜு சன்னி இயக்கத்தில் பேசில் ஜோசப் நடித்துள்ள படம் `Maranamass'. ரிப்பர் சந்திரன் என்ற கிரிமினலை பிடிக்கும் முயற்சிகளில் நடக்கும் கலாட்டாவே கதை.
காலித் ரஹ்மான் இயக்கத்தில் நஸ்லென் நடித்துள்ள படம் `Alappuzha Gymkhana'. இளைஞர்கள் சிலர் அமெச்சூர் பாக்சிங்கில் கலந்து கொள்கிறார்கள். ஏன் எதற்கு என்பதே கதை.
கோபிசந்த் மலினேனி இயக்கத்தில் சன்னி தியோல் நடித்துள்ள படம் `Jaat'. ரணதுங்கா என்ற கிராமத்தில் உள்ள பிரச்சனைகளை ஒரு வழிப்போக்கன் தீர்க்க முயல்வதே கதை.
James Hawes இயக்கியுள்ள படம் `The Amateur'. தன் மனைவியின் மரணத்திற்கு நியாயம் கேட்டு போராடும் கணவனின் கதை.
நிதின் பாரத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் `Akkada Ammayi Ikkada Abbayi'. ஒரு காதல் கதையாக உருவாகியிருக்கிறது.
Christopher Landon இயக்கியுள்ள படம் `Drop'. பல வருடங்களுக்குப் பிறகு டேட்டிங் செல்லும், கணவரை இழந்த பெண், அவருக்கு வரும் ஒரு பிரச்சனை. அதை எப்படி சரி செய்கிறார் என்பதே கதை.
Alex Garland இயக்கியுள்ள படம் `Warfare'. ஈராக்கில் நடைபெற்ற போர் ஒன்றைப் பற்றிய கதை.