அடுத்தவர்களின் வாழ்க்கையை வைத்து விளையாடும் இந்த கும்பலை வேட்டையாட கிளம்பும் Seong Gi-hunற்கு என்ன ஆனது என்பதே SQUID GAMES சீசன் 2வின் ஒன்லைன்.
முதல் சீசனின் வெற்றியாளரான Seong Gi-hun விளையாட்டு என்னும் பெயரில் அடுத்தவர்களின் வாழ்க்கையுடன் விளையாடும் இந்த கும்பலை விடக்கூடாது என தீவிரமாக அவர்களை தேடி அலைகிறார். இந்த விளையாட்டை நடத்தும் ஃபிரன்ட் மேனை அம்பலப்படுத்துவதே Seong Gi-Hunன் நோக்கம். ஒரு போட்டியாளராக மீண்டும் போட்டிக்குள் நுழைகிறார் Seong Gi-hun. ஆனால், இந்த முறை ஒரு புதிய விதி சேர்க்கப்படுகிறது. ஒவ்வொரு போட்டி முடிந்த பின்னரும் மீதமிருப்பவர்கள் வாக்களிக்க வேண்டும். அவர்கள் போட்டியில் தொடர Oவை அழுத்த வேண்டும். போட்டியில் இருந்து விலக விரும்புபவர்கள் Xஐ தேர்வு செய்யலாம். எண்ணப்படும் வாக்குகளில் X அதிகம் இருந்தால், உயிரோடு இருக்கும் நபர்கள் போட்டியின் பரிசுத்திகை பிரித்துக்கொடுக்கப்படும். O அதிகம் இருந்தால், அடுத்த போட்டிக்கு தயாராக வேண்டும். இறுதியில் என்ன முடிவு எடுக்கப்படுகிறது; எத்தனை சுற்றுப் போட்டிகள் , போட்டிகளை நடத்துபவர்களை வென்றாரா Seong Gi-hun போன்ற கேள்விகளுக்கு விடை சொல்கிறது SQUID GAMES தொடரின் இரண்டாவது சீசன்
தென் கொரிய இணைய தொடர்களில் உலகம் முழுக்க முரட்டு ஹிட் அடித்த தொடர் என்றால் அது ஸ்குவிட் கேம்ஸ் தான். உலக அளவில் ஹிட் அடிக்கும் வெப் சீரிஸ் என்றால் மாயாஜாலம், பீரியட் டிராமா, ஹாரர், குடும்ப உறவு, அடல்ட் காமெடி , ஃபிரெண்ட்ஷிப் என ஏதாவது ஒரு ஸ்பெஷல் விஷயம் இருக்க வேண்டும். கேம் ஆஃப் த்ரோன்ஸ், ஸ்பார்ட்டகஸ், ஃபிரென்ஸ், SUITS, PRISON BREAK என உலக அளவில் ஹிட் அடித்த எல்லா தொடர்களும் இதனுள் அடங்கிவிடும். கேமிங் சீரிஸ் என வைத்துக்கொண்டாலும், அதில் பெரும்பாலும் ஃபேன்டஸி உலகமே வியாபித்து இருக்கும். இவை எல்லாவற்றிலும் இருந்து மாறுபட்ட கதையுடன் வந்து உலக அளவில் ஹிட் அடித்தது SQUID GAME. அப்படி SQUID GAMEல் என்ன ஸ்பெஷல் என்றால், சிம்பிளாக இருந்ததுதான் SQUID GAMEன் ஸ்பெஷல். MAKE IT SIMPLE என்பார்களே, ஸ்குவிட் கேமிங் கதையை அப்படித்தான் வடிவமைத்திருந்தார் Hwang Dong-hyuk ஹுவாங் டாங் ஹூக். தென் கொரியாவின் சீயோல் நகரத்தைச் சேர்ந்த ஹூவாங் இயல்பிலேயே ஒரு காமிக்ஸ் பிரியர்.
இவர் எழுதிய இயக்கிய முதல் படமான MY FATHER அப்பாவைத் தேடும் மகன் குறித்தது. மனிதர்களின் உணர்ச்சிகள் தான் ஹூவாங் டாங் ஹூக் கதைகளின் ஆன்மா. SQUID GAMEல் குழந்தைத்தன விளையாட்டுக்களை கருப்பொருளாக அவர் எடுத்துக்கொண்டாலும் அதன்வழி அவர் சொல்ல வருவது மனித மனங்களின் ஊசலாட்டங்களைத்தான். சாமான்யனின் கழுத்தில் எப்போதும் தொங்கும் கத்தி அவன் வாங்கிக் குவித்திருக்கும் கடன் தான். ஹோம்லோன், கார் லோன் , எஜுகேசனஸ் லோன் என ஆரம்பித்து மனிதன் வளர வளர அவனுடன் அவன் வாங்கிய கடனும் வளர்ந்துகொண்டே வருகிறது. இதைத்தான் SQUID GAMEன் கருவாக எடுத்துக்கொண்டார். இதற்கு பின்னால் இருக்கும் காரணம் மிகவும் எளிமையானது. SQUID GAME மெகா வெற்றிக்குப் பிறகு ஹூவாங் பெரும் பணக்காரர் என்றாலும், அதற்கு முன்னர் அவரும் கடன் சுமையால் மன உளைச்சலுக்கு ஆளான நபர் தான்.
இப்படியாக ஆரம்பிக்கப்பட்ட ஸ்குவிட் கேம்ஸ் தொடரின் அடுத்த பாகம் என்பதால் எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருந்தது. முதல் பாகத்தை மிஞ்சும் அளவுக்கு இந்தப் பாகம் நிச்சயம் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்தத் தொடருக்கென பிரத்யேகமாக புதிய விளையாட்டுக்களை இணைத்திருந்தாலும், இதில் முதல் பாகத்திலிருந்த எமோசனல் காட்சிகள் மிஸ்ஸிங். தாய்~ மகன் சென்ட்டிமென்ட் தவிர மற்ற காட்சிகள் பெரிதாக ஈர்க்கவில்லை. தானோஸ் கதாபாத்திர நபரும் பெரிதாக பயமுறுத்தவில்லை. அதிலும், இந்த சீசனுக்கு க்ளைமேக்ஸ் இல்லாமல், 2025ல் மீதி என முடித்திருக்கிறாகள்.
முதல் சீசனுக்கு O சொன்ன நாம் , இதற்கு X தான் தர வேண்டியதிருக்கிறது. முடிச்சுக்கலாம் பாஸ்.