நீரஜ் பாண்டே உருவாக்கத்தில் உருவான தொடர் Special OPS. இதன் இரண்டாவது சீசன் வெளியாகவுள்ளது. ஒரு சிறப்பு குழு மூலம் நாட்டுக்கு வரும் அச்சுறுத்தல்கள் எப்படி தடுக்கப்படுகிறது என்பதே கதை.
விக்ரம் - அருண் இயக்கத்தில் வைபவ் நடித்த படம் `சென்னை சிட்டி கேங்க்ஸ்டர்'. வங்கி கொள்ளையை மையமாக கொண்டிருக்கும் காமெடி படம்.
ராம் இந்திரா இயக்கியுள்ள படம் `மனிதர்கள்'. சில இளைஞர்களின் ஒரு த்ரில்லிங்கான இரவு பற்றிய கதை.
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகார்ஜுனா நடித்த படம் `குபேரா'. பணத்தால் ஏற்படும் விஷயங்கள், விளைவுகள் பற்றிய படம்.
விஜய் இயக்கத்தில் பெல்லாம் கொண்டா ஸ்ரீனிவாஸ், மஞ்சு மனோஜ், நர ரோஹித் நடித்துள்ள படம் `பைரவம்'. தமிழில் வெளியான கருடன் படத்தின் தெலுங்கு ரீமேக் இது.
பிரவீன் இயக்கத்தில் சுரேஷ் கோபி, அனுபமா நடித்துள்ள படம் `JSK - Janaki V vs State of Kerala'. ஜானகி என்ற பெண் நடத்தும் நீதி போராட்டமே கதை.
ராகவ் மிர்த் இயக்கத்தில் ராஜூ நடித்துள்ள படம் `பன் பட்டர் ஜாம்'. இரண்டு தோழிகள் தங்கள் மகன் மற்றும் மகளை திருமணத்தில் இணைக்க முடிவு செய்கிறார்கள், அதன் பின் என்ன நடக்கிறது என்பதே கதை.
சிவராஜ் இயக்கத்தில் கலையரசன் நடித்துள்ள படம் `டிரெண்டிங்'. VLOG செய்யும் ஜோடி ஒன்றின் கதையே படம்.
மணிவர்மன் இயக்கத்தில் தமன் நடித்துள்ள படம் `ஜென்ம நட்சத்திரம்'. ஒரு புதையல் வேட்டையில் நடக்கும் சம்பவங்களே கதை.
பாரதி சிவலிங்கம் இயக்கியுள்ள படம் `சென்ட்ரல்'. கிராமத்தில் இருந்து சென்னை வரும் ஒரு இளைஞனை பற்றிய கதை.
தமிழ் தயாளன் இயக்கியுள்ள படம் `கெவி'. கிராமம் ஒன்றில் நடக்கும் சர்வைவல் த்ரில்லரே களம்.
யுவராஜ்குமார் நடித்துள்ள படம் `Ekka'. தன்னை ஏமாற்றிய நபரை தேடும் ஹீரோவின் கதை.
மோஹித் சூரி இயக்கியுள்ள படம் `Saiyaara'. காதலும் காதல் சார்ந்தவையுமே கதை.
Jennifer Kaytin Robinson இயக்கியுள்ள படம் `I Know What You Did Last Summer'. இந்தப் பட வரிசையில் இது நான்காவது பாகம். வழக்கம் போல் கொடூர கொலைகாரனை பிடிக்கும் துரத்தல்களே படம்.