Secret Invasion
Secret Invasion Marvel Studios
ஓடிடி திரைப் பார்வை

Secret Invasion | முதல் எபிசோடுலயே எத்தனை ட்விஸ்ட்டு..!

karthi Kg

Shapeshifting தன்மை கொண்ட ஸ்க்ரல்களின் சதித் திட்டங்களில் இருந்து பூமியை நிக் ஃப்யூரியின் குழு எப்படி காப்பாற்றுகிறது என்பதே சிக்ரெட் இன்வேசன் சீரிஸின் ஒன்லைன்.

Secret Invasion

ரஷ்யாவிற்கும் அமெரிக்காவிற்கும் சண்டையை மூட்டிவிட ஸ்க்ரல்கள் களத்தில் இறங்குகிறார்கள். எவரட் ராஸ் (மார்ட்டின் ஃப்ரீமேன்) வழியில் முதல் ட்விஸ்ட். என்னடா இது என எல்லோரும் கலங்கிப் போக, SABERல் இருந்து மீண்டும் உலகை நோக்கி வருகிறார் நிக் ஃப்யூரி. மனிதர்களின் நண்பனான டலோஸ் (ஸ்க்ரல் தான்) உதவியுடன் தீய ஸ்க்ரல் டீமைத் தேடி அலைகிறார்கள் நிக் ஃப்யூரி தலைமையிலான டீம். ஸ்பாய்லர்கள் இல்லாமல் சொல்ல வேண்டுமென்பதால் முதல் எபிசோடை இதோடு முடித்துக்கொள்வது நலம்.

மார்வெல் சினிமேட்டிக் யுனிவர்ஸ் (MCU ) திரைப்படங்கள் , டிவி தொடர்கள் என கலக்கிக்கொண்டிருக்கிறது. நான்காம் ஃபேஸில் லோகி, வாண்டா விஷன், மூன் நைட், மிஸ் மார்வெல் என பட்டையைக் கிளப்பிய குழு தற்போது ஐந்தாவது ஃபேஸை சீக்ரெட் இன்வேசனுடன் ஆரம்பித்திருக்கிறது. மார்ட்டின் ப்ரீமேன், எமிலியா கிளார்க், சாமுவேல் ஜாக்சன், ஒலிவியா கால்மேன், கிங்ஸ்லீ மென் அடிர், டான் சீட்லீ, பென் மெண்டல்சன் என பல பரிட்சயமான முகங்கள்.

Secret Invasion

ஸ்க்ரல்

ஏற்கெனவே கேப்டன் மார்வெல் திரைப்படத்தில் நாம் பார்த்த ஷேப்ஷிஃப்டர்களான ஸ்க்ரல்களை இதில் மீண்டும் களமிறக்கியிருக்கிறார்கள். கேமியோ ரோலில் வரும் அந்த முக்கிய கதாபாத்திர ட்விஸ்ட்டுடன் தான் எபிசோடே ஆரம்பிக்கிறது என்பதால் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லை. திரைப்படங்களையும், டிவி தொடர்களையும் பெரிய அளவில் ஒன்றிணைக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறது மார்வெல். மார்வெல் ஏஜெண்ட்ஸ் ஆஃப் ஷீல்டு டிவி தொடரிலேயே பில் கோல்சன், நிக் ஃப்யூரி போன்ற கதாபாத்திரங்களையும், திரைப்படங்களில் வந்த அதே நடிகர்களையும் பயன்படுத்தியிருப்பார்கள். டிவி தொடரான டேர்டெவில் கதாபாத்திரத்தை ஏற்ற நடிகரும் வேறொரு படத்தில் தலை காட்டுவார். மார்வெல்லின் நான்காவது ஃபேஸில் இது கிட்டத்தட்ட அடுத்த நகர்வுக்குச் சென்றது என்றே சொல்லமுடியும். திரைப்படங்களில் முதன்மை கதாபாத்திரம் ஏற்ற நடிகர்களை வைத்து , புதிய கிளைக்கதைகளை சீரிஸ் வடிவில் உருவாக்கிக்கொண்டிருக்கிறார்கள். லோகிக்கும் ஆண்ட் மேனுக்கும் ஒரே வில்லன் என்பதெல்லாம் இதன் அடிப்படையில் தான். டிசி காமிக்ஸில் இதை வேறாகப் பார்க்க முடியும். குறிப்பாக கடந்த வாரம் தி பிளாஷ் திரைப்படம் வந்திருந்தாலும் அதன் டிவி தொடரில் கிரான்ட் ஆஸ்டின் தான் பிளாஷாக வருவார். டிவி தொடரில் கேமியோ தந்திருப்பார் திரைப்படங்களில் ஃபிளாஷாக வரும் எஸ்ரா மில்லர்.

சீக்ரெட் இன்வேசனின் முதல் எபிசோடு கொஞ்சம் எமோஷனல் கொஞ்சம் மர்டர் என கலவையாக முடிந்திருக்கிறது. அடுத்தடுத்த எபிசோடுகளில் தான் கதை எதை நோக்கி நகர்கிறது இதை எப்படி மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸில் வரும் படங்களுடன் இணைக்கப்போகிறார்கள் என்பதெல்லாம் புலப்படும்.

ஆச்சர்யங்களுக்குக் காத்திருப்போம்..!