ஓடிடி திரைப்பார்வை pt
ஓடிடி திரைப் பார்வை

Retro முதல் Tourist Family வரை | இந்த வார OTT, தியேட்டர் லிஸ்ட்!

இந்த வாரம் வெளியாகவிருக்கும் படங்களின் விவரங்கள் இதோ!

Johnson

Series

Black White And Gray (Hindi) SonyLIV - May 2

புஷ்கர் சுனில் இயக்கியுள்ள சீரிஸ் `Black White And Gray'. டேனியல் க்ரே என்ற பத்திரிகையாளர் கண்டுபிடிக்க முயலும் ஒரு உண்மை பற்றிய கதை.

Kull: The Legacy of the Raisingghs (Hindi) Jio Hotstar - May 2

ஷாஹிர் ரஸா இயக்கியுள்ள சீரிஸ் `Kull: The Legacy of the Raisingghs'. ராஜகுடும்பம் ஒன்றில் நடக்கும் அதிகார போட்டிகளே கதை.

Post Theatrical Digital Streaming

28 Degree Celsius (Telugu) Prime - Apr 29

அணில் விஸ்வநாத் இயக்கியுள்ள படம் `28 Degree Celsius'. தலையில் அடிபட்டு 28 செல்ஸியஸ் வெப்ப நிலையில் வாழ வேண்டும் என்ற கண்டிஷன் அஞ்சலிக்கு , அவரை காப்பாற்ற கார்த்தி எடுக்கும் முயற்சிகளே கதை.

Varunan (Tamil) Aha - May 1

ஜெயவேல் முருகன் இயக்கிய படம் `வருணன்'. தண்ணீர் பிரச்சனையை மையமாக கொண்டார் உருவான படம்.

Bromance (Malayalam) SonyLIV - May 1

`Jo and Jo', `Journey of Love 18+’ படங்களை இயக்கிய அருண் டி ஜோஸ் இயக்கிய படம் `Bromance’. ஷிண்டோ என்ற இளைஞன் காணாமல் போக, அவனைத் தேடி அவனின் நண்பர்கள் அலையும் பயணமே படம்.

Theatre

Retro (Tamil) - May 1

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் `ரெட்ரோ'. தன் பழைய வாழ்க்கையை காதல் மனைவிக்காக கைவிட நினைக்கும் ஹீரோவுக்கு என்ன ஆகிறது என்பதே கதை.

Tourist Family (Tamil) - May 1

அபிஷான் ஜீவிந்த் இயக்கத்தில் சசிக்குமார், சிம்ரன் நடித்துள்ள படம் `டூரிஸ்ட் ஃபேமிலி'. இலங்கையில் இருந்து தப்பி சென்னை வரும் ஒரு குடும்பத்தின் கதை.

Hit 3 (Telugu) - May 1

சைலேஷ் இயக்கத்தில் நானி நடித்துள்ள படம் ` HIT 3'. அர்ஜுன் சர்க்கார் எடுக்கும் வழக்கும், அதை தீர்க்க அவர் எடுக்கும் முயற்சிகளுமே கதை.

Raid 2 (Hindi) - May 1

ராஜ்குமார் குப்தா இயக்கத்தில் அஜய் தேவ்கன் நடித்துள்ள படம் `RAID 2'. வருமான வரித்துறை அதிகாரி அமய் இம்முறை ரெய்ட் செல்லும் போது ஏற்படும் சம்பவங்களே கதை.

The Bhootnii (Hindi) - May 1

சித்தாந்த் இயக்கத்தில் சஞ்சய் தத் நடித்துள்ள படம் `The Bhootnii'. ஹாரர் படமாக உருவாகியிருக்கிறது.

The Legend Of Ochi (English) - May 1

Isaiah Saxon இயக்கியுள்ள படம் `The Legend Of Ochi'. கிராபதியா என்ற தீவில் வாழும் ஒரு சிறுமியின் கதை.

Thunderbolts (English) - May 1

Jake Schreier இயக்கியுள்ள படம் ` Thunderbolts '. ஒரு மோசமான மிஷனை முடிக்க கிளம்பும் குழுவின் கதை.