Gabriel García Márquez எழுதிய நாவல் One Hundred Years of Solitude, அதே பெயரில் ஸ்பானிஷ் மொழி சீரிஸாக உருவாகியுள்ளது. Macondo நகரத்து Buendía குடும்பத்தில் நிகழும் மேஜிகல் ரியலிச சம்பவங்களே கதை.
Anand Tiwari இயக்கத்தில் 2020ல் வெளியான சீரிஸ் `Bandish Bandits’. கர்நாடக சங்கீதத்திற்கும் - பாப் இசைக்குமான மியூசிக்கல் வார்தான் கதைக் களம்.
Pablo Larraín இயக்கத்தில் ஏஞ்சலினா ஜோலி நடித்துள்ள படம் `Maria’. பாடகி Maria Callasன் வாழ்க்கை வரலாறாக உருவாகியுள்ளது இப்படம்.
Pat Boonnitipat இயக்கியுள்ள படம் `How to Make Millions Before Grandma Dies'. தன்னுடைய பாட்டியை கவனித்துக் கொள்ள அவருடன் நேரம் செலவிடும் பேரனின் கதை.
ராஜேந்திர பிரசாத், ஸ்ரீகாந்த் நடித்துள்ள படம் `Harikatha’. அமானுஷ்ய நிகழ்வுகளை மையமாக கொண்டுள்ள படம்.
Kanu Behl இயக்கத்தில் மனோஜ் பாஜ்பய் நடித்துள்ள படம் `Despatch’. பத்திரிகையாளர் ஒருவரின் உண்மை கண்டறியும் பயணமே கதை.
Jaume Collet-Serra இயக்கியுள்ள படம் `Carry On'. விமான நிலையத்தில் TSA ஒருவருக்கு வரும் போன் காலும், அதைத் தொடர்ந்த நிகழ்வுகளுமே கதை.
சிவா இயக்கத்தில் சூர்யா நடித்த படம் `கங்குவா’. பல ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த போராளிக்கும், நிகழ்காலத்தில் ஒரு இளைஞனுக்கும் உள்ள தொடர்பை கூறுகிறது படம்.
பா இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்த படம் `தங்கலான்’. பல நூற்றாண்டுகளுக்கு முன்பு கே ஜி எஃபில் தங்கத்தை எடுக்க செல்லும் தொழிலாளர்கள் பற்றிய கதை.
ரோஹிட் ஷெட்டி இயக்கத்தில் அஜய் தேவ்கன், ரன்வீர் சிங், அக்ஷய்குமார், டைகர் ஷெராஃப், அர்ஜூன் கபூர், கரீனா கபூர், தீபிகா படுகோன் நடித்த படம் `Singham Again'. ராமாயணத்தையும் காப் யூனிவர்ஸையும் கலந்து கட்டி மாஸ் மசாலா காட்ட இருக்கிறார் ரோ`ஹிட்’.
Jake Kasdan இயக்கிய படம் `Red One'. சாண்டா க்ளாஸ் கடத்தப்பட, கிறிஸ்துமஸ் இரவிற்கு முன் அவரை மீட்க இருவர் கிளம்பும் பயணமே படம்.
விஷ்ணு மோகன் இயக்கத்தில் பிஜூ மேனன் நடித்த படம் `Kadha Innuvare'. நான்கு ஜோடிகளைப் பற்றிய கதை.
அமல் நீரத் இயக்கத்தில் குஞ்சாக்கோ போபன், ஃபஹத் பாசில், ஜோதிர்மயி நடித்த படம் `Bougainvillea’. ஒரு சுற்றுலா பயணி காணாமல் போன விஷயத்தில் ஒரு குடும்பம் சம்பந்தப்பட, அதைப் பற்றிய விசாரணைகளே கதை.
சுரேஷ் குமார் இயக்கத்தில் அன்சன் பால், ரெபா மோனிகா ஜான் நடித்துள்ள படம் `மழையில் நனைகிறேன்’. காதல் ஜோடிக்குள் நடக்கும் நிகழ்வுகளே கதை.
ராஜசேகர் இயக்கத்தில் சித்தார்த் - ஆஷிகா நடித்துள்ள படம் `மிஸ் யூ’. தனக்குப் பிடிக்காத ஒரு பெண்ணை காதலிக்கும் சூழலில் மாட்டிக் கொள்ளும் ஒரு இளைஞனின் கதை.
அர்ஜூன் இயக்கத்தில் மிர்ச்சி சிவா நடித்துள்ள படம் `சூதுகவ்வும் 2’. முதல் பாகத்துக்கான ப்ரீக்குவலாக உருவாகியிருக்கிறது என சொல்லப்படுகிறது.
பிரசாத் முருகன் இயக்கத்தில் பரத், அபிராமி, அஞ்சலி நாயர் நடித்துள்ள படம் `ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் மெட்ராஸ்’. ஒரு சம்பவம் சிலரது வாழ்க்கையை எப்படி புரட்டுகிறது என்பதே கதை.
ஜிஷோ இயக்கத்தில் ராஜ் பி ஷெட்டி, அபர்ணா பாலமுரளி நடித்துள்ள படம் `Rudhiram’. பரபரப்பான சர்வைவல் த்ரில்லராக உருவாகியிருக்கிறது.
விது வினோத் சோப்ரா இயக்கத்தில் சென்ற ஆண்டு வெளியாகி பெரிய ஹிட்டான `12th Fail’ படம் உருவானதைப் பற்றிய ஆவணப்படமே `Zero Se Restart’.
Scott Beck இயக்கியுள்ள படம் `Heretic’. இரு பெண்கள் ஒரு வீட்டில் மாட்டிக் கொள்ள, அதன் பின் நடப்பவையே கதை.
ஹரிதா இயக்கத்தில் வேதிகா நடித்துள்ள படம் `Fear’. சிந்துவின் பாய்ஃப்ரெண்ட் திடீரென காணாமல் போக, பல எதிர்பாரா சம்பவங்கள் நடக்கிறது. சிந்து தப்பினாரா என்பதே கதை.