Wednesday Addams பள்ளியில் சேர்க்கப்படுவதற்குப் பிறகு என்ன நடக்கிறது என்பதே கதை.
தேவகட்டா இயக்கியுள்ள சீரிஸ் `Maya Sabha'. சந்திரபாபு நாயுடு - YS ராஜசேகர ரெட்டி இருவரின் அரசியலை மையமாக வைத்து உருவாகியிருக்கிறது.
சூர்யா குமார் இயக்கத்தில் சத்யா தேவ் நடித்துள்ள சீரிஸ் `Arabia Kadali'. மீன் பிடிக்க சென்று, தவறுதலாக பாகிஸ்தான் எல்லைக்குள் செல்லும் இந்திய மீனவர்கள் பற்றிய கதை.
ஃபாரூக் கபீர் இயக்கியுள்ள சீரிஸ் `Salakaar'. ஒரு இளம் அதிகாரியின் ரகசிய மிஷன் பற்றிய கதை.
Tim Story இயக்கத்தில் Eddie Murphy நடித்துள்ள படம் `The Pickup'. பணத்தை திருடும் கொள்ளையர்களுக்கு, இரு ட்ரக் டிரைவர்களுக்கும் இடையேயான மோதலே கதை.
ராம் இயக்கத்தில் சிவா நடித்த படம் `பறந்து போ'. ஒரு தந்தைக்கும் மகனுக்குமான உணர்வுகளை பேசும் படமாக உருவாகியிருக்கிறது.
Jonathan Eusebio இயக்கிய படம் `Love Hurts'. ஒரு ரியல் எஸ்டேட் நபரிடம், அவரின் கடந்த காலத்திலிருந்து ஒரு ஆபத்து தேடி வருகிறது. அதன் பின் நடப்பவையே கதை.
பாராசைட் படம் மூலம் புகழ்பெற்ற Bong Joon Ho இயக்கிய படம் `Mickey 17'. Mickey 17 என்ற குழு, ஐஸ் ப்ளானட்டில் செய்யும் வேலைகள், இறப்பே இல்லாமல் இருக்க செய்யும் வேலைகளுமே கதை.
பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் சூரி, ஐஸ்வர்யா லக்ஷ்மி நடித்த படம் `மாமன்'. ஒரு மாமனுக்கு, அவனது மருமகனுக்கும் இடையேயான அன்பை பேசும் படம்.
ராம்குமார் கிருஷ்ணகுமார் இயக்கிய படம் `ஓஹோ எந்தன் பேபி'. அஷ்வின் - மீரா இருவரின் காதலில் வரும் சிக்கலும் அதன் தீர்வுமே கதை.
லால் ஜூனியர் இயக்கத்தில் டொவினோ தாமஸ் நடித்த படம் `Nadikar’. எதிர்பாராத விதமாக சினிமாவில் சூப்பர்ஸ்டார் ஆகிவிடும் ஒருவனின் பயணத்தைப் பற்றி சொல்லும் படம்.
இந்த வாரம் தமிழில் பெரிய பட ரிலீஸ் ஏதும் இல்லை. அடுத்த வாரம் கூலி வர வழிவிட்டு கோலிவுட் காத்திருக்கிறது.
இருந்தாலும் சின்ன சின்ன படங்கள் வெளியாகவுள்ள. `ரெட்ஃபிளவர்', `வானரன்', `உழவர் மகன்', `தங்கக் கோட்டை', `காத்துவாக்குல ஒரு காதல்', `பாய் ஸ்லீப்பர் செல்', `மகேஸ்வரன் மகிமை', `மாமரம்', `ராகு கேது' ஆகிய படங்கள் இவ்வாரம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிபின் கிருஷ்ணா இயக்கியுள்ள படம் `Sahasam'. ஒரு அட்வென்சர் கதைக்களத்தில் உருவாகியுள்ள படம்.
அன்குர் சிங்களா இயக்கியுள்ள படம் `Ghich Pich'. மிடில் க்ளாஸ் தந்தைகளுக்கும் அவர்களின் மகன்களுக்கும் இடையிலான நிகழ்வுகளே கதை.
ஷ்ரவன் திவாரி இயக்கியுள்ள படம் `Holy Ghost'. இளம் பெண் கிரேஸ் பிரவுன் கடத்தலும் அதனைத் தொடர்ந்து நடக்கும் நிகழ்வுகளும் படத்தின் கதை.
Nisha Ganatra இயக்கியுள்ள படம் `Freakier Friday'. அம்மாவின் ஆன்மா மகள் உடலிலும், மகளின் ஆன்மா அம்மாவின் உடலிலும் மாறிய பின் நடக்கும் கலாட்டாக்களே கதை.
Eva Victor இயக்கியுள்ள படம் `Sorry, Baby'. ஆக்னஸ் என்ற பெண்ணின் வாழ்க்கையில் நடக்கும் விஷயங்களே கதை.
James DeMonaco இயக்கியுள்ள படம் `The Home'. ரிட்டயர்மெண்ட் ஹோம் ஒன்றில் வேளைக்கு சேரும் இளைஞன் எதிர்கொள்ளும் பிரச்சனைகளே கதை.
Zach Cregger இயக்கியுள்ள படம் `Weapons'. ஒரு வகுப்பை சேர்ந்த குழந்தைகள் தொடர்ந்து மர்மமான முறையில் காணாமல் போகின்றனர். அதற்கு பின் இருக்கும் மர்மமே கதை.
Michael Shanks இயக்கியுள்ள படம் `Together'. திருமணமான ஜோடி ஒன்று, மர்மமான இடத்திற்கு சென்ற பின் நடப்பவையே கதை.