2020ல் வெளியான பாத்தாள் லோக் சீரிஸின் இரண்டாவது சீசன் வெளியாகவுள்ளது. சென்ற சீசனில் கருத்து சுதந்திரம், அரசு இயந்திரம் எனப் பலவற்றை தைரியமாக பேசியது, இம்முறை இன்னும் அழுத்தமாக பல விஷயங்களை சொல்ல வருகிறது.
பாலிவுட்டின் மிகப்பிரபலமான ரோஷன்ஸ் குடும்பத்தினர் பற்றிய ஆவணத்தொடர். இசையமைப்பாளர் ராஜேஷ் ரோஷன், இயக்குநர் ராகேஷ் ரோஷன், நடிகர் ஹ்ரித்திக் ரோஷன் ஆகியோர் இதில் இடம்பெற்றுள்ளனர்.
ராகுல் இயக்கத்தில் உருவான படம் `Mokshapatam'. வெவ்வேறு மனிதர்களின் பிரச்சனைகள் ஒன்றோடு ஒன்று எப்படி தொடர்புபடுகிறது என்பதே கதை.
Seth Gordon இயக்கத்தில் Jamie Foxx, Cameron Diaz நடித்துள்ள படம் `Back in Action'. முன்னாள் சி ஐ ஏ உளவாளிகளான எமிலி மற்றும் மேட் இருவரது ரகசிய அடையாளம் உடைந்த பின் அவர்கள் செய்யும் சாகசங்களே கதை.
செந்தில் ராஜன் இயக்கத்தில் வினய் ஃபோர்ட், ஜோஜு ஜார்ஜ் நடித்த படம் `Kadam Kadha'. இரு நண்பர்கள் தங்களின் கடனை அடைக்க கடுமையாக உழைக்கிறார்கள். அப்போது அவர்களை சந்திக்கும் ஒருவரால் அவர்களது வாழ்க்கையே மாறுகிறது. அதன் பிறகு என்னாகிறது என்பதே கதை.
மிர்ச்சி சிவா நடித்த படம் `சூதுகவ்வும் 2'. தாஸ் பின்பற்றும் கடத்தல் ஸ்டைலுக்கு உரிமையாளர் யார் என்பதையும், அவருக்கு என்ன ஆனது என்பதையும் சொல்கிறது படம்.
ஆஷிக் அபு இயக்கத்தில் திலீஷ் போத்தன், அனுராக் காஷ்யப், சுரபி லக்ஷ்மி, தர்ஷனா ராஜேந்திரன் எனப் பலரும் நடித்த படம் `Rifle Club'. ரைபிள் க்ளப் ஒன்றில் அதன் உறுப்பினர்களுக்கு இடையே உயிர் பிழைக்க நடக்கும் போராட்டம் ஒருபுறம், ஆயுத வியாபாரி ஒருவரின் பகை மறுபுறம் சேர இறுதியில் என்ன ஆகிறது என்பதே கதை.
நடிகர் ஜோஜூ ஜார்ஜ் இயக்குநராக களம் இறங்கிய படம் `Pani’. ஒரு குடும்பத்தின் அமைதி, இரு வெளியாட்களால் குலைகிறது. அதன்பின் நடப்பவையே கதை.
சூஜித் சிர்கார் இயக்கத்தில் அபிஷேக் பச்சன் நடித்துள்ள படம் `I Want to Talk'. கேன்சரால் பாதிக்கப்படும் அர்ஜுனின் வாழ்க்கையும், அவர் மக்களோடு அவருக்கு ஏற்படும் உறவு சிக்கல்களுமே கதை களம்.
சுந்தர் சி இயக்கத்தில் விஷால், சந்தானம், அஞ்சலி, வரலட்சுமி நடித்துள்ள படம் `மத கஜ ராஜா'. நண்பனுக்கு வரும் சிக்கலை தீர்க்க செல்லும் ஹீரோவின் கதை. 12 ஆண்டுகளுக்கு முந்தைய பொங்கலுக்கு வர வேண்டிய படம், ஒரு வழியாக திரையில் ஏற இருக்கிறது.
பாபி இயக்கத்தில் பாலகிருஷ்ணா நடித்துள்ள படம் `Daaku Maharaaj'. மக்களின் பிரச்சனைகளை தீர்க்க அதிகாரி ஒருவர், போராளியாவதே கதை.
கிருத்திகா இயக்கத்தில் ஜெயம்ரவி, நித்யாமேனன், வினய் நடித்துள்ள படம் `காதலிக்க நேரமில்லை'. இருவேறு மனநிலையில் இருக்கும் ஜோடிக்கு இடையே வரும் ஈர்ப்பு என்னாகிறது என்பதே கதை.
விஷ்ணுவர்தன் இயக்கத்தில் ஆகாஷ் முரளி, அதிதி ஷங்கர் நடித்துள்ள படம் `நேசிப்பாயா'. அர்ஜுன் தன் முன்னாள் காதலியை காப்பாற்ற செய்யும் செயல்களே கதை.
அனில் ரவிபுடி இயக்கத்தில் வெங்கடேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், மீனாக்ஷி சௌத்ரி நடித்துள்ள படம் `Sankranthiki Vasthunam'. முன்னாள் போலீஸ் ஒரு மிஷனுக்காக களம் இறங்குகிறார், அவருடன் ஒரு பக்கம் எக்ஸ் கேர்ள் ஃபிரெண்ட், இன்னொரு பக்கம் எக்சலெண்ட் ஒய்ஃப் இருவரும் இருக்க, மிஷன் என்ன ஆகிறது என்பதே கதை.
செளபின் சாஹிர், பேசில் ஜோசப் நடித்துள்ள படம் ` Pravinkoodu Shappu'. சாராய கடை ஒன்றில் 11 பேர் கொண்ட குழு, குடியும் சீட்டாட்டமுமாக இரவை கழிக்கிறது. அதே கடையின் ஓனர் தூக்கில் தொங்கி இறந்துகிடப்பது தெரிந்த பின் என்ன நடக்கிறது என்பதே கதை.
கங்கனா ரனாவத் இயக்கி நடித்துள்ள படம் `Emergency'. 1975ல் நடந்த சம்பவங்களை இந்திரா காந்தி எவ்வாறு கையாண்டார் என சொல்கிறது படம்.
Leigh Whannell இயக்கத்தில் Christopher Abbott நடித்துள்ள படம் `Wolf Man'. பிளேக் தன் குடும்பத்துடன் ஊருக்கு வெளியே உள்ள பார்ம் ஹவுஸில் இருக்கும் போது ஒரு மிருகம் தாக்குகிறது, அதன் பின் நடக்கும் அதிரடிகளே கதை.