ராகுல் பாண்டே இயக்கியுள்ள சீரிஸ் ` Gram Chikitsalay '. நகரத்தில் இருந்து கிராமத்தில் இருக்கும் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு வரும் மருத்துவர் சந்திக்கும் நிகழ்வுகளே கதை.
ப்ரியங்கா கோஷ், நுபுர் அஸ்தானா இயக்கியுள்ள சீரிஸ் `The Royals'. ஒரு இளவரசருக்கு, சுயமாக உழைத்து முதலாளியான பெண்ணுக்கும் இடையேயான காதலே கதை.
அஜித் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய படம் `குட் பேட் அக்லி'. தன் மகனுக்காக, கேங்ஸ்டர் தொழில் இருந்து விலகி இருந்த ஹீரோ, மீண்டும் தன் மகனுக்காகவே களத்தில் இறங்குவதே கதை.
பொம்மரில்லு பாஸ்கர் இயக்கத்தில் சித்து நடித்த படம் `Jack'. தீவிரவாதி ஒருவனை பிடிக்கும் முயற்சிக்கு நடுவே, ஹீரோ என்ன செய்கிறார் என்பதே கதை.Ouseppinte Osiyathu (Malayalam) Prime - May 9சரத் சந்திரன் இயக்கத்தில் விஜயராகவன் நடித்த படம் `Ouseppinte Osiyathu'. ஒரு எதிர்பாராத பிரசனையால் தந்தை மற்றும் மகன்களுக்கு இடையே மோதல் ஏற்பட அதன் பின் என்ன என்பதே கதை.
சிவம் நாயர் இயக்கத்தில் ஜான் ஆப்ரஹாம் நடித்த படம் `The Diplomat’. இந்தியர் ஒருவரை இஸ்லமாபாத்தில் இருந்து மீட்க டெபுடி ஹைகமிஷனர் ஜே பி சிங் எடுக்கும் முயற்சிகளே கதை.
வெங்கி இயக்கத்தில் நிதின் நடித்த படம் `Robinhood'. நீரா என்ற பெண்ணின் காவலாளியாக மாறும் ஒரு திருடனைப் பற்றிய கதை.
தமர் இயக்கியுள்ள படம் `Sarkeet'. பாலு - ஸ்டெஃபி தம்பதியின் குழந்தை வளர்ப்பில் வரும் சவாலும், அதை அவர்கள் எதிர்கொள்ளுவதுமே கதை.
மனுஷவ்ராஜ் இயக்கியுள்ள படம் `Padakkalam'. காமிக் புக் மீது ஆர்வம் கொண்ட நால்வர் சிக்கிக் கொள்ளும் ஒரு பிரச்சனை, அதில் இருந்து அவர்கள் வெளியேறுவதே கதை.
பிரமோத் இயக்கத்தில் கிஷோர், ஷ்ரத்தா நடித்துள்ள படம் `கலியுகம்'. 2064ல் உலகத்தில் உணவு, தண்ணீர் மற்றும் மனிதத்திற்கு மிகப்பெரிய தட்டுப்பாடு இருக்க, உயிர் பிழைத்திருக்க நடக்கும் போராட்டங்களே கதை.
பிரபாடிஸ் இயக்கியுள்ள படம் `கஜானா'. நாகமலை காட்டுக்குள் செல்லும் ஒரு குழு சந்திக்கும் அமானுஷ்யங்கள் கதை.
ஷிவா இயக்கத்தில் தேவயானி நடித்துள்ள படம் `நிழற்குடை'. காணாமல் போகும் ஒரு குழந்தை பற்றிய கதை.
பிரவீன் இயக்கத்தில் சமந்தா தயாரித்துள்ள படம் `Subham'. சீரியல் பார்ப்பதை மையப்படுத்தி காமெடி ஹாரர் படமாக உருவாகியிருக்கிறது.
கார்த்திக் ராஜூ இயக்கத்தில் ஸ்ரீ விஷ்ணு நடித்துள்ள படம் `Single'. ஒரு முக்கோணக் காதல் கதையாக உருவாகியிருக்கிறது.
ஜெய ஷங்கர் இயக்கியுள்ள படம் `Ari'. உங்கள் ஆசை நிறைவேற்றி தரப்படும் என்ற ஒரு விளம்பரத்தை பார்க்கும் ஆறு பேர், தங்கள் ஆசையை நிறைவேற்ற செல்கிறார்கள். அதன் பின் என்ன என்பதே கதை.
பின்டோ இயக்கியுள்ள படம் `Prince and Family'. குடும்பத்தில் தன் ஒருவனுக்கே திருமணம் ஆகவில்லை என்ற கவலையில் இருக்கும் பிரின்ஸ் வாழ்வில் என்ன நடக்கிறது என்பதே கதை.
கரண் ஷர்மா இயக்கத்தில் ராஜ்குமா ராவ், வாமிகா கபி நடித்துள்ள படம் `Bhool Chuk Maaf'. காதலுக்காக கவர்மெண்ட் வேலையில் சேரும் ரஞ்சன், ஒரு விஷயத்தை மறப்பதால் என்ன நடக்கிறது என்பதே கதை.
Joe Carnahan இயக்கியுள்ள படம் `Shadow Force'. தங்கள் மகனுடன் உயிர்பிழைக்க ஓடும் தம்பதியின் கதை.