இந்த வார லிஸ்ட் முகநூல்
ஓடிடி திரைப் பார்வை

DRAGON முதல் NEEK வரை; இந்த வார OTT, தியேட்டர் லிஸ்ட்..!

இந்த வாரம் வெளியாகவிருக்கும் படங்களின் விவரங்கள் இதோ!

Johnson

Series

Kanneda (Hindi) Jio Hotstar - Mar 21

சந்தன் அரோரா இயக்கியுள்ள சீரிஸ் `Kanneda'. 90களில் ரொரண்டோவில் இருந்த ஒரு தெருப்பாடகனின் வாழ்க்கை பயணமே கதை.

Khakee: The Bengal Chapter (Hindi) Netflix - Mar 20

நீரஜ் பாண்டே உருவாக்கியுள்ள சீரிஸ் `Khakee: The Bengal Chapter'. அர்ஜுன் மைத்ரா கேங்க்ஸ்டர்களையும், ஊழலில் உழன்ற அரசியல்வாதிகளையும் எப்படி எதிர்கொள்கிறார் என்பதே கதை.

Post Theatrical Digital Streaming

Anora (English) Jio Hotstar - Mar 17

Sean Baker இயக்கத்தில் ஐந்து ஆஸ்கர் விருதுகளை வென்று உலகம் முழுக்க கவனம் குவித்த படம் `Anora’. மிகப்பெரிய பணக்கார இளைஞனை திருமணம் செய்து கொள்கிறார் ஒரு பாலியல் தொழிலாளி. இந்த விஷயம் இளைஞனின் பெற்றோருக்கு தெரிந்த பின் என்னாகிறது என்பதே கதை.

The Outrun (English) Netflix - Mar 18

Nora Fingscheidt இயக்கிய படம் `The Outrun'. தனது சொந்த ஊருக்கு திரும்ப வரும் ரோனாவின் வாழ்வில் நடப்பவையே கதை.

The Room Next Door (English) Prime - Mar 18

Pedro Almodóvar இயக்கியுள்ள படம் `The Room Next Door'. ஒன்றாக பணியாற்றிய இரு தோழிகள், பல வருடங்கள் கழித்து சந்தித்துக் கொள்வதே கதை.

Brahma Anandam (Telugu) Aha - Mar 20

நிகில் இயக்கிய படம் `Brahma Anandam'. பிரம்மானந்தம் என்ற இளைஞனின் வாழ்க்கையில் ஒரு சிக்கல், அதை தீர்க்க 10 நாட்கள் ஒருவருக்கு பேரனாக நடிக்க வேண்டும். அதன் பின் நடப்பவையே கதை.

Officer On Duty (Malayalam) Netflix - Mar 20

ஜித்து அஷ்ரஃப் இயக்கத்தில் குஞ்சாக்கோ போபன் நடித்த படம் `Officer on Duty’. காவலதிகாரியான ஹரிஷங்கர், நகை மோசடி வழக்கை கையில் எடுக்க, அதற்கு பின் வரும் பல திருப்பங்களே கதை.

Baby and Baby (Tamil) Sun NXT - Mar 21

பிரதாப் இயக்கத்தில் ஜெய், சத்யராஜ் நடித்த படம் `பேபி அண்ட் பேபி’. ஒரு குடும்பத்துக்குள் நடக்கும் காமெடி கலாட்டாக்களே கதை.

Nilavukku Enmel Ennadi Kobam (Tamil) Prime - Mar 21

தனுஷ் இயக்கியுள்ள படம் `நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’. முன்னாள் காதலியின் திருமணத்துக்கு செல்லும் இளைஞன் மற்றும் அவனது நண்பர்கள், என்ன விஷயங்களை சந்திக்கிறார்கள் என சொல்லும் கதை.

Dragon (Tamil) Netflix - Mar 21

அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், அனுபமா, மிஷ்கின் நடித்த படம் `டிராகன்’. கல்லூரியில் கெத்தாக வாழ்ந்த இளைஞன், படிப்பு முடிந்த பின் என்ன ஆகிறான் எனபதே கதை.

Theatre

Asthram (Tamil) - Mar 21

அரவிந்த் இயக்கிய படம் `அஸ்த்ரம்’. தொடர் தற்கொலைகளை விசாரிக்கும் அகிலனின் விசாரணை என்ன ஆகிறது என்பதே கதை.

Trauma (Tamil) - Mar 21

தம்பிதுரை இயக்கியுள்ள படம் `ட்ராமா’. சுந்தர் - கீதா, செல்வி - ஜீவா இந்த இரண்டு ஜோடிகளில் வாழ்க்கையில் நடக்கும் அதிர்ச்சிகர சம்பவமே கதை.

Pelli Kani Prasad (Telugu) - Mar 21

அபிலாஷ் இயக்கத்தில் சப்தகிரி நடித்துள்ள படம் `Pelli Kani Prasad’. வரதட்சணை மூலம் பணம் பெரும் பேராசையுள்ள குடும்பத்தால், பிரசாத்தின் திருமணம் தள்ளிப் போகிறது. தன் திருமணத்துக்கு பிரசாத் எடுக்கும் முயற்சிகளே கதை.

Tumko Meri Kasam (Hindi) - Mar 21

விக்ரம் பட் இயக்கியுள்ள படம் `Tumko Meri Kasam'. காதல், துரோகம், அதிகாரப் வெறி, நீதி எனப் பல விஷயங்களை பேசுகிறது படம்.

Snow White (English) - Mar 21

1937 வெளியான அனிமேஷனில் உருவான Snow White and the Seven Dwarfs படத்தின் புது வெர்ஷன் தான் `Snow White'. சித்தியிடம் சிக்கி தவிக்கும் ராஜ்ஜியத்தை மீட்க செல்லும் இளவரசியின் கதை.