Parking | Chithha | Annapoorani | Animal Canva
ஓடிடி திரைப் பார்வை

இந்த வீக்கெண்ட் நிறைய படம், சீரிஸ் வருது..!

இந்த வாரம் Dhootha, Chithha, Annapoorani, Animal , Parking என நிறைய நல்ல படைப்புகள் வெளியாகவிருக்கின்றன.

Johnson

Obliterated (English) Netflix - Nov 30

Obliterated

Jon Hurwitz & Hayden Schlossberg இயக்கத்தில் உருவான சீரிஸ் `Obliterated’. ஒரு தீவிரவாத கும்பலை பிடிக்க, பரபரப்பாக செயல்படும் குழுவைப் பற்றிய கதை. ஆக்‌ஷன் விரும்பிகளுக்கு சரியான தீனியாக வர இருக்கிறது.

Shehar Lakhot (Hindi) Prime - Dec 1

Shehar Lakhot

பாலிவுடில் Manorama Six Feet Under, NH10 போன்ற படங்களை இயக்கிய நவ்தீப் சிங் இப்போது இயக்கியிருக்கும் இந்தி வெப் சீரிஸ், `Shehar Lakhot’. தேவ் தாமோர் விருப்பமே இல்லாமல் தனது சொந்த ஊருக்கு செல்கிறார். அங்கு எதிர்பாராத விதமாக ஒரு கொலை வழக்கில் அவர் கைதாகிறார். தான் நிரபராதி என அவர் எப்படி நிரூபிக்கிறார் என்பதே கதை.

Virgin River S5: Part 2 (English) Netflix - Nov 30

Virgin River S5: Part 2

ஐந்து சீசனாக ஓடிக் கொண்டிருக்கும் `Virgin River' சீரிஸின் ஐந்தாவது சீசனின் மீதமுள்ள எப்பிசோடுகள் வெளியாகிறது. Melinda Monroe என்ற பெண்ணை மையமாக வைத்து நகரும் கதை.

Dhootha (Telugu) Prime - Dec 1

Dhootha

தமிழில் யாவரும் நலம், 24 போன்ற படங்களை இயக்கிய விக்ரம் குமார் இயக்கியுள்ள தெலுங்கு சீரிஸ் `Dhootha’. நாக சைதன்யா, ப்ரியா பவானி சங்கர், பார்வதி ஆகியோர் முதன்மை கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். பத்திரிகையாளர் சாகர், ஒரு செய்தித்தாளில் வரும் செய்திகள் நிஜமாகவே நடக்கிறது என்பதை தெரிந்து கொள்கிறார், அந்த மர்மத்துக்குப் பின் இருப்பது என்ன என்பதே கதை.

Monster Inside: America's Most Extreme Haunted House (English) Hotstar - Dec 1

Monster Inside: America's Most Extreme Haunted House

Andrea Renzi இயக்கியிருக்கும் ஆவணப்படம் `Monster Inside: America's Most Extreme Haunted House'. நேவியில் பணிபுரிந்த Russ McKamey ஹாரர் விஷயங்களில் ஆர்வம் கொண்டதும், அதன் பின் அவர் எதிர்கொண்ட ஹாரர் தருணங்களும் அடங்கியதே இந்த ஆவணப்படம்.

Family Switch (English) Netflix - Nov 30

Family Switch

Charlie's Angels, 3 Days to Kill, The Babysitter போன்ற படங்களை இயக்கிய Joseph McGinty Nichol தற்போது இயக்கியிருக்கும் படம் `Family Switch’. Bill Walker குடும்பத்துடன் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்துக்கு தயாராகிறார். திடீரென ஒரு நாள் காலை எழுந்து பார்க்கும்போது அம்மா உடலில் மகள், மகள் உடலில் அம்மா, அப்பா உடலில் மகன், மகன் உடலில் அப்பா, நாய்குட்டி உடலில் குழந்தை, குழந்தையின் உடலில் நாய்குட்டி என ஆன்மாக்கள் தாறுமாறாக கூடு விட்டு கூடு பாய்கிறது. இதன் பின் நடக்கும் காமெடிகளே கதை.

Candy Cane Lane (English) Prime - Dec 1

Candy Cane Lane

Eddie Murphy நடிப்பில் உருவாகியிருக்கும் படம் Candy Cane Lane. Chris Carverக்கு தனது குடியிருப்பு பகுதியில் நடக்கும் கிறிஸ்மஸ் அலங்காரப் போட்டியில் ஜெயிக்க வேண்டும் என ஆசை. அவர் அதற்காக வாங்கும் ஒரு பொருள், நகரத்திற்குப் பெரிய பிரச்சனையை கொண்டு வருகிறது. இதன் பின் என்ன நடக்கிறது என்பதே கதை.

May December (English) Netflix - Dec 1

May December

Natalie Portman, Julianne Moore நடித்திருக்கும் படம் `May December’. நடிகை எலிசபெத், ஜார்ஜியாவுக்கு கிரேஸ் என்ற பெண்ணை சந்திக்க வருகிறார். கிரேஸ் கதாபாத்திரத்தை மையமாக வைத்து உருவாகும் படத்தில் கிரேஸ் கதாப்பாத்திரத்தில் எலிசபெத் நடிக்க இருக்கிறார். அவர் உடன் இருந்து அவர் வாழ்க்கையை புரிந்து கொள்ள ஆரம்பிக்கிறார் எலிசபெத். இதன் பின் என்ன ஆகிறது என்பதே படம்.

Chithha (Tamil) Hotstar - Nov 28

Chithha

S U அருண்குமார் இயக்கத்தில் சித்தார்த், நிமிஷா சஜயன் நடித்த படம் `சித்தா’. ஈஸ்வரனுக்கு தன் அண்ணன் மகள் மேல் தனிப் பிரியம். அவளுக்கு நேரும் ஒரு அசம்பாவிதத்தை, ஈஸ்வரன் எப்படி எதிர்கொள்கிறார் என்பதே கதை.

Martin Luther King (Telugu) SonyLIV - Nov 29

Martin Luther King

தமிழில் மடோன் அஸ்வின் இயக்கி வெளியான `மண்டேலா’ படத்தின் தெலுங்கு ரீமேக்கே `Martin Luther King'. ஸ்பூஃப் படங்களில் நடித்துக் கொண்டிருந்த, சம்பூர்னேஷ் பாபு நடிப்பில் உருவான முதல் சீரியஸ் படம். ஒரே ஒரு ஓட்டு கூட தேர்தலில் எவ்வளவு முக்கியம் என்பதை சட்டையராக சொல்லும் படம்.

Mission Raniganj (Hindi) Netflix - Dec 1

Mission Raniganj

தினு சுரேஷ் தேசாய் இயக்கத்தில் அக்‌ஷய் குமார் நடித்த இந்திப் படம் `Mission Raniganj'. சுரங்கப் பணிகளை மேற்கொள்ளும் ஜஸ்வத் சிங் கில், நிலக்கரிச் சுரங்கத்தில் சிக்கிக் கொண்ட 65 தொழிலாளர்களை எப்படி மீட்கிறார் என்பதே கதை.

Indiana Jones and the Dial of Destiny (English) Hotstar - Dec 1

Indiana Jones and the Dial of Destiny

இண்டியான ஜோன்ஸ் பட வரிசையின் கடைசி பாகமாக வந்தது `Indiana Jones and the Dial of Destiny’. டைம் ட்ராவல் வரலாற்றை மாற்றியமைக்க நினைக்கும் வில்லன், அவரை தடுத்து நிறுத்த போராடும் ஜோன்ஸ். இறுதியில் வென்றது யார் என்பதே கதை.

800 (Tamil) Jio Cinema - Dec 2

800

முத்தையா முரளிதரனின் பயோபிக்காக உருவான படம் `800’. முத்தையா முரளிதரன் வாழ்க்கை எப்படியானதாக இருந்தது, அவர் சந்தித்த சவால்கள் என்ன? என்பதெல்லாம் தான் கதை.

Zara Hatke Zara Bachke (Hindi) Jio Cinema - Dec 2

Zara Hatke Zara Bachke

Luka Chuppi, Mimi போன்ற இந்திப் படங்களை இயக்கிய லக்‌ஷ்மன் உடேகர் இயக்கிய இந்திப் படம் தான் `Zara Hatke Zara Bachke'. கபில் - சௌம்யா சந்தோசமான தம்பதி. கூட்டுக் குடும்பத்தில் வாழும் இவர்கள் விவாகரத்து பெற முடிவு செய்கிறார்கள். இது அவர்களின் குடும்பத்திற்கு தெரிந்த பின் நடக்கும் கலாட்டாக்களே படம்.

The Equalizer 3 (English) Netflix - Dec 2

The Equalizer 3

The Equalizer பட வரிசையில் மூன்றாவது மற்றும் இறுதி பாகம் The Equalizer 3. Robert McCall இத்தாலியின் ஒரு அமைதியான நகரத்தில் குடியேறுகிறார். அங்கு லோக்கல் கிரிமினல் கும்பல் மக்களுக்கு குடைச்சல் கொடுக்க, அவர்களை Robert அடித்து ஓடவிடுவதே கதை.

Annapoorani (Tamil) - Dec 1

Annapoorani

நயன்தாரா லீட் ரோலில் நடித்திருக்கும் படம் `அன்னபூரணி’. ஆச்சாரமான பிராமண வீட்டுப் பெண், இந்தியாவிலேயே சிறந்த சமையல் கலைஞராக விரும்புகிறார். செஃப் ஆக நினைக்கும் அவரது பயணம் என்ன ஆகிறது என்பதே கதை.

Parking (Tamil) - Dec 1

Parking

ஹரீஷ் கல்யாண் - எம்.எஸ்.பாஸ்கர் நடித்திருக்கும் படம் `பார்க்கிங்’. வாடகை வீட்டில் குடியிருக்கும் இரண்டு குடும்பம், அவர்களுக்குள் கார் பார்க்கிங்கிற்காக சண்டை வருகிறது. அந்த சண்டை எங்கு போய் முடிகிறது என்பதே படம்.

Naadu (Tamil) - Dec 1

Naadu

எங்கேயும் எப்போதும் சரவணன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் `நாடு’. கொல்லி மலையில் நடக்கும் சில சம்பவங்களே படத்தின் கதை.

Va Varalam Va (Tamil) - Dec 1

Va Varalam Va

பிக் பாஸ் புகழ் பாலாஜி நடித்திருக்கும் படம் `வா வரலாம் வா’. சொகுசான வாழ்க்கை வாழ நினைக்கும் ஹீரோவும் அவனது நண்பனும், 40 குழந்தைகளைக் கடத்துகிறார்கள். அவர்கள் நினைத்த படி பணயத்தொகை கிடைத்ததா என்பதே கதை.

Sooragan (Tamil) - Dec 1

Sooragan

கார்த்திகேயன் நடித்திருக்கும் படம் `சூரகன்’. காவலதிகாரியான ஹீரோவை அவர் செய்த தவறுக்காக, போலீஸில் இருந்து விலக்கி வைத்திருக்கிறார்கள். அப்போது அவர் முறியடிக்க வேண்டிய ஒரு சதித்திட்டம் உருவாகிறது. அதை முடித்தாரா இல்லையா என்பதே கதை.

Antony (Malayalam) - Dec 1

Antony

மலையாளத்தில் மாஸ் மசாலா இயக்குநர் ஜோஷி இயக்கியிருக்கும் படம் `Antony’. அவரன் சிட்டியையே கலக்கும் ரவுடி ஆண்டனி. அவர் செய்யும் ஒரு குற்றச்செயல் எப்படி பலரை பாதிக்கிறது என்பதே கதை.

Philip's (Malayalam) - Dec 1

ஆல்ஃப்ரெட் குரியன் ஜோசப் இயக்கத்தில் உருவாகியிருக்கும் மலையாளப்படம் `Philip's'. ஃபிலிப்ஸ் குடும்பத்தில் சந்தோஷத்தை குலைக்கும் ஒரு சம்பவம் நடக்கிறது. அதிலிருந்து அந்தக் குடும்பம் எப்படி மீள்கிறது என்பதே கதை.

Dance Party (Malayalam) - Dec 1

Dance Party

விஷ்ணு உன்னிகிருஷ்ணன், ஸ்ரீநாத் பாசி, சைன் டாம் சாக்கோ நடித்திருக்கும் மலையாளப்படம் `Dance Party’. அனிக்குட்டன் தனது காதலி அனிதாவை கல்யாணம் செய்ய முயன்று வருகிறார். அவனது அண்ணன், போபன் ஏற்படுத்தும் குழப்பம் எப்படி அனிக்குட்டனை பாதிக்கிறது என்பதே கதை.

Animal (Hindi) - Dec 1

Animal

சந்தீப் வங்கா இயக்கத்தில் ரன்பீர் கபூர், அனில் கபூர், பாபி தியோல், ரஷ்மிகா நடித்திருக்கும் இந்திப்படம், `Animal’. தனது குடும்பத்துக்காகவும், தந்தைக்காகவும் எந்த எல்லைக்கும் செல்லும் ஒரு இளைஞனின் கதை.

Sam Bahadur (Hindi) - Dec 1

Sam Bahadur

மேனா குல்சர் இயக்கத்தில் விக்கி கௌஷல் நடித்துள்ள இந்திப்படம் `Sam Bahadur’. 1917ல் இந்தியா பாகிஸ்தான் போரின் போது, பணியாற்றிய சாம் மனேக்‌ஷா பற்றிய பயோபிக் தான் இந்தப் படம்.

The Bikeriders (English) - Dec 1

The Bikeriders

Shotgun Stories படத்தின் இயக்குநர் Jeff Nichols தற்போது இயக்கியிருக்கும் படம் `The Bikeriders’. Midwestern motorcycle club எப்படி தோன்றியது, அதில் இருந்த உறுப்பினர்களின் வாழ்க்கை ஆகியவைதான் இந்தப் படத்தின் கதை.