Series
Daredevil: Born Again (English) Hotstar - Mar 4
`Daredevil’ சீரிஸின் தொடர்ச்சியாக வந்திருக்கிறது `Daredevil: Born Again'. Matt Murdock மற்றும் Wilson Fisk இடையிலான மோதலும், அவர்களின் துவக்கம் பற்றியதே கதை. தொடரின் விமர்சனத்தைப் படிக்க, இங்கு க்ளிக் செய்யவும் .
The Waking of a Nation (Hindi) SonyLIV - Mar 7
ஜாலியன் வாலியாபாக் படுகொலைகள் பின்னணியில் நிகழும் கதை. அதன் பின்னணியில் என்னென்ன நடந்தது என்பதை விவரிப்பதாக உருவாகியிருக்கிறது.
Dupahiya (Hindi) Prime - Mar 7
சோனம் நாயர் இயக்கியுள்ள சீரிஸ் `Dupahiya'. 25 ஆண்டுகளாக குற்றமே நடக்காத ஒரு கிராமம், அதற்கான விழாவைக் கொண்டாட தயாராகிறது. இந்த சூழலில் பரிசுக்கோப்பையும், திருமணத்திற்கு அளிக்க வைத்திருந்த பைக் ஒன்றும் திருடு போகிறது. ஊரின் மானத்தைக் காப்பாற்ற ஊர் மக்கள் எடுக்கும் முயற்சிகளே கதை.Nadaaniyan (Hindi) Netflix - Mar 7
OTT
Nadaaniyan (Hindi) Netflix - Mar 7
சௌனா கௌதம் இயக்கத்தில் இப்ரஹிம், குஷி கபூர் நடித்துள்ள படம் `Nadaaniyan’. பியாவின் நண்பர்கள் ஒரு தவறான புரிதலால் எதிரிகளாகிவிட, அவர்களை கடுப்பேத்துவதற்காக வாடகை பாய் ஃப்ரெண்டாக அர்ஜூனை அழைத்து வருகிறாள். அதன் பின் நடப்பவையே கதை.
Post Theatrical Digital Streaming
Joker: Folie à Deux (English) Hotstar - Mar 2
Todd Phillips இயக்கத்தில் Joaquin Phoenix நடித்து 2019ல் வெளியான Joker படத்தின் சீக்குவலாக உருவானது `Joker: Folie a Deux'. முதல் பாகத்து சம்பவங்களுக்கு இரண்டு ஆண்டுகள் கழித்து கதை நடக்கிறது. ஆர்த்தர் செய்த கொலைகளுக்காக சிறையிலிருக்கிறார். கொலைகள் செய்யக் காரணம் ஆர்த்தருக்குள் இருந்த ஜோக்கர் தான். ஆர்த்தர் ஸ்ப்லிட் பர்சனாலிட்டி என்பதால் அவர் நிரபராதி என நடக்கிறது வழக்கு. இதன் பிறகு என்ன ஆகிறது என்பதே கதை.
Vidaamuyarchi (Tamil) Netflix - Mar 3
அஜித்குமார் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கிய படம் `விடாமுயற்சி'. கருத்து வேறுபாட்டை சரி செய்ய பயணம் செல்கிறார்கள் தம்பதி. அதில் மனைவி திடீரென காணாமல் போக, அவரை கணவர் தேடுவதே படம்.
Dhoom Dhaam (Telugu) etv WIN - Mar 6
சாய் கிஷோர் இயக்கியுள்ள படம் `Dhoom Dhaam’. இரு காதல் கதைகளைப் பற்றி சொல்லும் படம்.
Kudumbasthan (Tamil) Zee5 - Mar 7
ராஜேஷ்வர் காளிஷ்வர் இயக்கத்தில் மணிகண்டன், சான்வி நடித்த படம் `குடும்பஸ்தன்'. நடுத்தர குடும்பத்தின் பொறுப்புகளை சுமக்கும் சாமானியனின் கதை.
Thandel (Telugu) Netflix - Mar 7
சந்து இயக்கத்தில் நாக சைதன்யா, சாய் பல்லவி நடித்த படம் `Thandel'. மீன்பிடிக்க செல்லும் குழு ஒன்று பாகிஸ்தான் எல்லைக்கு தவறுதலாக சென்றுவிட, அதை தொடர்ந்து நடப்பவையே கதை.
Baapu (Telugu) Hotstar - Mar 7
தயா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் `Baapu’. கிராமத்தில் வசிக்கும் ஒரு குடும்பத்தின் தினசரிகளை காமெடியாக சொல்லும் படம்.
Rekhachithram (Malayalam) SonyLIV - Mar 7
ஜோஃபின் இயக்கத்தில் ஆசிஃப் அலி, அனஸ்வரா ராஜன் நடித்த படம் ` Rekhachithram'. சஸ்பென்ஷனில் இருந்து மீண்டும் பணியில் சேரும் காவலர் தன் இழந்த மரியாதையை மீட்க, 40 வருடமாக தீராத ஒரு கேஸை கையில் எடுக்கிறார். அதை முடித்தாரா? என்பதே கதை.
Theatre
Kingston (Tamil) - Mar 7
கமல் பிரகாஷ் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ், திவ்ய பாரதி நடித்துள்ள படம் `கிங்ஸ்டன்’. கடலுக்குள் இருக்கும் ஆபத்தையும் மீறி ஹீரோ செய்யும் சாகசமே கதை.
Gentlewoman (Tamil) - Mar 7
ஜோஷ்வா இயக்கியுள்ள படம் `ஜெண்டில்வுமன்’. கணவன் காணாமல் போன பிறகு, அவருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பது மனைவிக்கு தெரிய வருகிறது. அதன் பின் என்ன என்பதே கதை.
Yamakaathaghi (Tamil) - Mar 7
பிபின் ஜார்ஜ் இயக்கியுள்ள படம் `எமகாதகி’. இறந்து போன பெண்ணின் சடலத்தை வீட்டில் இருந்து வெளியே எடுக்க முடியாதபடி பல தடைகள் ஏற்படுகிறது. அது ஏன் என்பதே கதை.
Niram Marum Ulagil (Tamil) - Mar 7
பிரிட்டோ இயக்கத்தில் ரியோ, பாரதிராஜா, யோகிபாபு நடித்துள்ள படம் `நிறம் மாறும் உலகில்’. வெவ்வேறு மனிதர்களும் அவர்களின் வாழ்க்கை சூழலுமே கதைக் களம்.
Badava (Tamil) - Mar 7
நந்தா இயக்கத்தில் விமல், சூரி நடித்துள்ள படம் `படவா’. வேலை இல்லாமல் பொறுப்பற்ற இளைஞன் ஒருவன் ஊருக்கு வரும் சிக்கலை எப்படி தீர்க்கிறான் என்பதே கதை.
Murmur (Tamil) - Mar 7
ஹேமந்த் இயக்கியுள்ள படம் `மர்மர்’. சப்த கன்னிகள் பற்றி ஆவணப்படம் எடுக்க செல்லும் குழுவுக்கு நேரும் அமானுஷ்ய சமபவங்களே கதை.
Asthram (Tamil) - Mar 7
அரவிந்த் இயக்கியுள்ள படம் `அஸ்த்ரம்’. தொடர் தற்கொலைகளை விசாரிக்கும் அகிலனின் விசாரணை என்ன ஆகிறது என்பதே கதை.
Leg Piece (Tamil) - Mar 7
ஸ்ரீநாத் இயக்கியுள்ள படம் `லெக் பீஸ்’. சிக்கன் லெக் பீஸ் மூலம் ஏற்படும் ஆபத்தை வைத்து நடக்கும் காமெடிகளே கதை.
Vadakkan (Malayalam) - Mar 7
சஜீத் இயக்கத்தில் கிஷோர் நடித்துள்ள படம் `Vadakkan’. தொடர்ச்சியாக நடக்கும் கொலைகளை பற்றி விசாரிக்கும் ஒரு பாரானார்மல் இன்வஸ்டிகேட்டர் பற்றிய கதை.
Mickey 17 (English) - Mar 7
பாராசைட் படம் மூலம் புகழ்பெற்ற Bong Joon Ho இயக்கியுள்ள படம் `Mickey 17'. Mickey 17 என்ற குழு, ஐஸ் ப்ளானட்டில் செய்யும் வேலைகள், இறப்பே இல்லாமல் இருக்க செய்யும் வேலைகளுமே கதை.
The Monkey (English) - Mar 7
Osgood Perkins இயக்கியுள்ள படம் `The Monkey’. தந்தைக்கு சொந்தமான பழைய குரங்கு பொம்மை ஒன்றை பரணில் இருந்து கண்டுபிடிக்கிறார்கள் இரட்டை சகோதரர்களான, ஹால் மற்றும் பில். அதன் பின் நடக்கும் கொடூரமான மரணங்கள், அதற்கான காரணமுமே படம்.