தந்தையின் விருப்பப்படி வக்கீலுக்கு பயிற்சி எடுக்கும் ஒருவனின் வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகளே sonylivல் வெளியாகியிருக்கும் Court Kacheri`
சர்ஜன்பூர் மாவட்டத்திலேயே மிகப்பெரிய வக்கீல் ஹரிஷ் மாதூர். வக்கீல், டாக்டர்களுக்கு இருக்கும் பொதுவான குணம் ஹரிஷ் மாதூருக்கும் இருக்கிறது. அதாவது அவரைப் போலவே அவர் மகன் பரம் மாதூரையும் வக்கீல் ஆக்க வேண்டும் என்பதே அவரின் எண்ணம். அதற்காக வேண்டா வெறுப்பாக அவரை வக்கீலுக்கு பிராக்டிஸ் செய்ய வைக்கிறார். தெரியாத்தனமாக ஒரு வழக்கிற்குள் பரம் மாதுரே வந்து சிக்கிக்கொள்ள அடுத்த என்ன நடக்கிறது என்பதே இந்த வெப் சிரீஸின் ஸ்பாய்லர் இல்லாத கதை.
TVF தயாரிப்பு என்றாலே எமோஷனலுக்கு பஞ்சம் இருக்காது. ஒரு எளிமையான கதையை எடுத்துக்கொண்டு அதனுள் மனிதர்களின் உணர்வுகளை வைத்து திரைக்கதையை உருவாக்குவார்கள். பஞ்சாயத்து தொடரைப் போலவே, இதுவும் அதற்கு விதிவிலக்கல்ல. குல்லாக்கில் வாழ்க்கையின் மகிழ்ச்சிகளை சேமிக்கப் போராடும் நடுத்தர வர்க்க குடும்பம் ஆக இருந்தாலும் சரி, பஞ்சாயத்து தொடரில் ஒரு அரசு வேலைக்குப் பாலியாடு ஆக்கப்பட்ட CAT மாணவராக இருந்தாலும் சரி, கோட்டா ஃபேக்டரியில் நாட்டின் சிறந்த கல்லூரிகளில், குறிப்பாக IIT-யில் தகுதி பெற கோட்டாவில் படிக்கும் சிறிய ஊர்ப்பிள்ளைகளாக இருந்தாலும் சரி, நம் மனநிலையோடு எளிதாக ஒத்துப்போகும் கதைகளை படைப்பதில் TVF நிறுவனம் ஒரு சூப்பர்ஸ்டார். ஆனால், இந்தத் தொடரில் அது ஓரளவு தான் வொர்க் ஆகியிருக்கிறது. இந்நிறுவனத்தின் முந்தைய தொடரான 'கிராமத்தில் சிக்கும் மருத்துவர்' கதையைவிட இது பெட்டர் என்பதே ஆறுதல்.
ஒவ்வொரு எபிசோடும் வெறும் 30 நிமிடங்கள் தான் என்பது பெரும் ஆறுதல். எதையும் நீட்டி முழக்காமல் சிறப்பான அவுட்புட்டைக் கொடுத்திருக்கிறார்கள். மொத்தமே 5 எபிசோடு தான் என்பதால் வீக்கெண்டு Binge Watchற்கு ஏற்ற பீல் குட் தொடராக நிச்சயம் கோர்ட் கச்சேரி இருக்கும் என்பதில் ஐயமில்லை.