OTT
ரெமோ டிசோசா இயக்கத்தில் அபிஷேக் பச்சன் நடித்துள்ள படம் `Be Happy'. மிகப்பெரிய டான்ஸ் ஷோவில் பங்கேற்க வேண்டும் என மகள் விரும்ப, அதற்கு தந்தை எப்படி உதவினார் என்பதே கதை.
ஹர்திக் கஜ்ஜர் இயக்கத்தில் நீனா குப்தா நடித்துள்ள படம் `Aachari Baa'. நகரத்தில் இருக்கும் மகன், தன் அம்மாவை வீட்டுக்கு அழைக்க, அவரும் மகிழ்ச்சியாக வருகிறார். ஆனால் அங்கு அவருக்கு காத்திருப்பது வேறு ஒரு அதிர்ச்சி. அது என்ன என்பதே கதை.
Post Theatrical Digital Streaming
ராம் நாராயண் இயக்கத்தில் விஷ்வாக் சென் நடித்த படம் `Laila’. சோனு ஒரு அழகுகலை நிபுணர், நெருக்கடி சூழ்நிலையால் பெண் வேடம் போட வேண்டிய நிலைக்கு ஆளாகிறார். அதன் பின் நடப்பவையே கதை.
சஞ்சித் இயக்கத்தில் தியான் ஸ்ரீனிவாசன் நடித்த படம் `Thrayam’. ஒரு நகரத்துக்கு வரும் சிலரின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களே கதை.
சுரேந்தர் ரெட்டி இயக்கத்தில் அகில், மம்மூட்டி நடித்த படம் `Agent’. தீவிரவாத கும்பலை பிடிக்க ஒரு ரா ஏஜெண்ட் செய்யு வேலைகளே கதை.
ஜோதிஷ் ஷங்கர் இயக்கத்தில் பேசில் ஜோசப் நடித்த படம் `Ponman '. ஜி ஆர் கோபன் எழுதிய Nalanchu Cheruppakar என்ற கதையை தழுவி உருவான படம். நகை ஒன்றை கடனாக கொடுக்கும் ஒரு நகைக் கடைக்கார தொழிலாளி, அந்த நகையை மீட்பதில் ஏற்படும் சிக்கல்களே கதை.
அனில் இயக்கத்தில் நானா படேகர் நடித்த படம் `Vanvaas'.ஒரு குடும்பத்துக்குள் நடக்கும் எமோஷனல் டிராமா தான் படம்.
David Derrick Jr, Jason Hand மற்றும் Dana Ledoux Miller இயக்கிய படம் `Moana 2’. 2016ல் வெளியான Moana போனா படக்கதையின் நிகழ்வுகளுக்கு மூன்றாண்டுகள் கழித்து நடப்பவையே கதை. தங்களைப் போன்று வேறு தீவுகளில் மக்கள் இருப்பார்களா என்ற மோனாவின் தேடலே படம்.
Theatre
ஸ்வினீத் இயக்கத்தில் ரியோ ராஜ், கோபிகா நடித்துள்ள படம் `ஸ்வீட் ஹார்ட்’. காதலில் வரும் வினோதமான சிக்கலே படத்தின் கதை.
சிங்கள மொழிப்படமான Tentigo படத்தை அதே இயக்குநர் இளங்கோ ராம் தமிழில் ரீமேக் செய்துள்ள படம் தான் `பெருசு’. வீட்டில் ஒரு இறப்பு நிகழ, அதைத் தொடர்ந்து நடக்கும் ஒரு சம்பவம், அதை சுற்றிய கலாட்டாக்களுமே கதை.
ராம் ஜெகதீஷ் இயக்கியுள்ள படம் `Court State vs A Nobody'. 19 வயது சிறுவன் மேல் பல்வேறு வழக்குகள் சுமத்தப்படுகிறது, அதில் போக்சோ குற்றமும் உண்டு. இதன் பின் என்ன ஆகிறது என்ற சட்ட போராட்டமே கதை.
விஷ்வகருண் இயக்கத்தில் கிரண் அப்பாவரம் நடித்துள்ள படம் `Dilruba’. ரொமாண்டிக் படமாக உருவாகியிருக்கிறது.
சிவம் நாயர் இயக்கத்தில் ஜான் ஆப்ரஹாம் நடித்துள்ள படம் `The Diplomat’. இந்தியர் ஒருவரை இஸ்லமாபாத்தில் இருந்து மீட்க டெபுடி ஹைகமிஷனர் ஜே பி சிங் எடுக்கும் முயற்சிகளே கதை.
பால்புதுமையினர் பற்றி பேசக்கூடிய ஆந்தாலஜி படமாக உருவாகியிருக்கிறது `My Melbourne’.Novocaine (English) - Mar 14Robert Olsen இயக்கத்தில் Jack Quaid நடித்துள்ள படம் `Novocaine’. வலியை உணர முடியாத ஹீரோ, அதையே ஒரு சூப்பர்பவர் போல் பயன்படுத்து, தன் காதலியை கடத்தி சென்றவர்களிடம் மோதுகிறார்.