Jason Momoa நடித்துள்ள சீரிஸ் `Chief of War'. ஹவாய் தீவுகளில் நடக்கும் அதிகார போராட்டமே கதை.
Steven Soderbergh இயக்கத்தில் Cate Blanchett நடித்த படம் `Black Bag'. மனைவி கேத்தரின் தேச துரோக வழக்கில் சிக்க, அவளது கணவன் என்ன செய்கிறார் என்பதே கதை.
ஸ்ரீகணேஷ் இயக்கத்தில் சித்தார்த், சரத்குமார், தேவயானி, மீதா, சைத்ரா நடித்த படம் ` 3BHK'. சொந்த வீடு வாங்க, ஒரு மிடில் க்ளாஸ் குடும்பம் சந்திக்கும் பிரச்சனைகளே கதை.
வேணு ஸ்ரீராம் இயக்கத்தில் நிதின் நடித்த படம் `Thammudu'. அக்கா - தம்பி பற்றிய பாசத்தை, த்ரில்லர் கலந்து சொல்லும் அட்வெஞ்சர் கதை.
டோனி மேத்திவ் இயக்கியுள்ள படம் `Surabhila Sundara Swapnam'. பிரச்சனை ஒன்று நடந்த பின் அதை செய்தது யார் என்ற தேடலே கதை.
கௌதம் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடித்துள்ள படம் `Kingdom'. ஒரு அண்டர்கவர் ஏஜென்ட் பற்றிய கதை.
ராஜவேல் இயக்கத்தில் தர்ஷன், ஆர்ஷா நடித்துள்ள படம் `ஹவுஸ்மேட்ஸ்'. புதுமண தம்பதி கார்த்திக் - அணு குடியேறும் வீட்டில் நிகழும் அமானுஷ்ய சம்பவங்களே கதை.
கௌதமன் இயக்கத்தில் தர்ஷன், லால் நடித்துள்ள படம் `சரண்டர்'. எலக்ஷன் பின்னணியில் நிகழும் காவல்துறைக்கும் - கேங்க்ஸ்டருக்கு இடையே நடக்கும் மோதலே கதை.
புகழ் நடித்துள்ள படம் `Mr Zookeeper'. அருங்காட்சியக காவலருக்கு மிருகங்களுடன் ஏற்படும் நட்பு பற்றிய கதை.
பிரபு ஸ்ரீனிவாஸ் இயக்கியுள்ள படம் `அக்யூஸ்ட்'. ஒரு கைதிக்கு காவலருக்குமான கதை.
நவீன் இயக்கத்தில் திஜே - ஜனனி நடித்துள்ள படம் `உசுரே'. ராகவா - ரஞ்சனாவின் காதல் கதையே படம்.
விஜய சேகரன் இயக்கியுள்ள படம் `போகி'. மலைக்கிராமம் ஒன்றிலிருந்து டாக்டருக்கு படிக்க செல்லும் மாணவி இறந்து போகிறார். அதன் பின் என்ன என்பதே கதை.
கதிர் - சைன் டாம் சாக்கோ நடித்துள்ள படம் `Meesha'. மிதுன் தன் நண்பர்களை ஒரு விருந்துக்கு அழைக்கிறான். ஆனால் இந்த விருந்துக்கு பின் ஒரு பெரிய திட்டம் இருக்கிறது. ஆனால் விருந்துக்கு திட்டத்தோடு வருவது மிதுன் மட்டுமல்ல.
அர்ஜூன் அசோகன் நடித்துள்ள படம் `Sumathi Valavu'. சுமதி என்ற பெண் ஒரு வளைவில் நடந்த விபத்தில் இறந்த பின், அந்த இடத்தில் பல அமானுஷ்யங்கள் நடக்கிறது. இதன் பின் இருக்கும் மர்மம் என்ன என்பதே கதை.
பரியேறும் பெருமாள் படத்தின் இந்தி ரீமேக்தான் `Dhadak 2'. சட்டம் பயிலும் மாணவனுக்கு சாதியால் ஏற்படும் பாதிப்புகளே கதை.
அஜய் தேவ்கன் நடித்துள்ள படம் `Son of Sardaar 2'. தன் மனைவியை சமாதானப்படுத்த, அவரது வீட்டுக்கு வரும் ஹீரோவுக்கு என்ன ஆகிறது என்பதே கதை.
Pierre Perifel இயக்கியுள்ள அனிமேஷன் படம் `The Bad Guys 2'. ஒரு குழு இணைந்து செய்யும் கொள்ளை திட்டமே கதை.
Liam Neeson நடித்துள்ள படம் `The Naked Gun'. Frank Drebin Jr. இம்முறை சந்திக்கும் பிரச்சனையும், அதன் தீர்வுமே கதை.