விக்னேஷ் பழனிவேல் இயக்கத்தில் கண்ணா ரவி, ஏஞ்சலின் நடித்துள்ள படம் `மதுரை பையனும் சென்னை பொண்ணும்’. படத்தின் தலைப்பு போலவே வேறு வேறு ஊரை சேர்ந்த, பையனும் பொண்ணும் சந்தித்துக் கொள்ள, அதன் பின் நடப்பவையே கதை.
Dani Girdwood மற்றும் Charlotte Fassler இயக்கியுள்ள படம் `My Fault: London'. தன் தாய் மற்றும் ஸ்டெப் ஃபாதருடன் அமெரிக்காவில் இருந்து லண்டன் செல்கிறாள் 18 வயது பெண். அங்கு அவர் சந்திக்கும் இளைஞனும், அதைத் தொடர்ந்து நடக்கும் நிகழ்வுகளுமே கதை.
ரிஷப் சேத் இயக்கத்தில் யாமி கௌதம் - ப்ரதிக் காந்தி நடித்துள்ள படம் `Dhoom Dhaam'. வீர் - கோயல் தம்பதியை தவறுதலாக ஒரு கும்பல் துரத்துகிறது. அதன் பின் நடக்கும் குழப்பங்களும், பிரச்சனைகளுமே கதை.
கிருத்திகா இயக்கத்தில் ஜெயம்ரவி, நித்யாமேனன் நடித்த படம் `காதலிக்க நேரமில்லை'. இருவேறு மனநிலையில் இருக்கும் ஜோடிக்கு இடையே வரும் ஈர்ப்பு என்னாகிறது என்பதே கதை.
ஹனீப் இயக்கத்தில் உன்னி முகுந்த் நடித்த படம் `Marco'. ஜான்விக் டைப்பில் ரத்தம் தெறிக்க தெறிக்க, அதிரடியான ஆக்ஷன் படம்.
பிரதாப் இயக்கத்தில் ஜெய், சத்யராஜ் நடித்துள்ள படம் `பேபி அண்ட் பேபி’. ஒரு குடும்பத்துக்குள் நடக்கும் காமெடி கலாட்டாக்களே கதை.
ஜெயப்பிரகாஷ் இயக்கத்தில் லிஜோ மோல் நடித்துள்ள படம் `காதல் என்பது பொதுவுடைமை’. எல்லா காதலும் சமமானதே என்பதை சொல்லும் கதை.
சுசீந்திரன் இயக்கியுள்ள படம் `2K லவ் ஸ்டோரி’. கார்த்திக் என்ற இளைஞனின் காதல் வாழ்க்கையை சொல்லும் கதை.
நந்தா இயக்கத்தில் விமல், சூரி நடித்துள்ள படம் `படவா’. வேலை இல்லாத இளைஞன், ஒருகட்டத்தில் பெரிய பொறுப்பு ஒன்றை எடுத்த பின் என்ன ஆகிறது என்பதே கதை.
ராஜகோபால் இயக்கத்தில் கவுண்டமணி நடித்துள்ள படம் `ஒத்த ஓட்டு முத்தையா’. அரசியலை மையப்படுத்திய படமாக உருவாகியிருக்கிறது.
ஜி ஷங்கர் இயக்கத்தில் ஸ்ரீகாந்த் நடித்துள்ள படம் `தினசரி’. திருமணத்தை நோக்கி செல்லும் ஒரு ஜோடியைப் பற்றிய கதை.
ஜே எஸ் கே சதீஷ் இயக்கத்தில் பாலாஜி, ரச்சிதா, சாந்தினி நடித்துள்ள படம் `ஃபயர்’. சைகாலஜிஸ்ட் ஒருவர் காணாமல் போக, அதன் பின் நிகழும் விசாரணைகளே படம்.
ராம் நாராயண் இயக்கத்தில் விஷ்வாக் சென் நடித்துள்ள படம் `Laila’. சோனு ஒரு அழகுகலை நிபுணர், நெருக்கடி சூழ்நிலையால் பெண் வேடம் போட வேண்டிய நிலைக்கு ஆளாகிறார். அதன் பின் நடப்பவையே கதை.
நிகில் இயக்கியுள்ள படம் `Brahma Anandam'. பிரம்மானந்தம் என்ற இளைஞனின் வாழ்க்கையில் ஒரு சிக்கல், அதை தீர்க்க 10 நாட்கள் ஒருவருக்கு பேரனாக நடிக்க வேண்டும். அதன் பின் நடப்பவையே கதை.
`Jo and Jo', `Journey of Love 18+’ படங்களை இயக்கிய அருண் டி ஜோஸ் இயக்கியுள்ள படம் `Bromance’. ஷிண்டோ என்ற இளைஞன் காணாமல் போக, அவனைத் தேடி அவனின் நண்பர்கள் அலையும் பயணமே படம்.
ஸ்ரீஜித் பாபு இயக்கத்தில் சஜின், அனஸ்வரா நடித்துள்ள படம் `Painkili’. சுகு என்ற இளைஞனின் வாழ்வில் உள்ள பிரச்சனைகள் பற்றிய கதை.
கோவிந்த் விஷ்ணு இயக்கத்தில் ஆண்டனி வர்கீஸ் நடித்துள்ள படம் `Daveed’. பவுன்சராக பணியாற்றும் முன்னாள் பாக்ஸர் பற்றிய கதை.
லக்ஷ்மன் உடேகர் இயக்கத்தில் விக்கி கௌஷல், ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள படம் `Chhaava’. சத்ரபதி சிவாஜியின் மகன், சத்ரபதி சம்பாஜி மஹாராஜின் கதை.
Julius Onah இயக்கத்தில் Harrison Ford, Anthony Mackie நடித்துள்ள படம் `Captain America: Brave New World'. சர்வதேச பஞ்சாயத்து ஒன்றை தீர்க்க வேண்டிய பொறுப்பு, புது கேப்டன் அமெரிக்காவான சாம் வில்சனுக்கு வருகிறது. டிவி சீரிஸான The Falcon and the Winter Soldierன் தொடர்ச்சியாக நிகழ்கிறது கதை.