சினிமா

பிரபல ஹாலிவுட் நடிகர் ஆல்பர்ட் ஃபின்னி காலமானார்

பிரபல ஹாலிவுட் நடிகர் ஆல்பர்ட் ஃபின்னி காலமானார்

webteam

பிரபல ஹாலிவுட் நடிகர் ஆல்பர்ட் ஃபின்னி காலமானார். அவருக்கு வயது 82.

ஹாலிவுட் படங்களான, சாட்டர்டே நைட் அண்ட் சண்டே மார்னிங், டோம் ஜோன்ஸ், த மேன் ஆப் நோ இம்பார்டன்ஸ், பிக் பிஷ், த பவுர்னே லீகஸி, ஜேம்ஸ்பாண்ட் படமான ஸ்கைபால் உட்பட ஏராளமான ஹாலிவுட் திரைப்படங்களில் நடித்திருப்பவர், பிரிட்டீஷ் நடிகர் ஆல்பர்ட் ஃபின்னி. 

சிறந்த நடிகருக்கான விருதுக்காக ஐந்து முறை ஆஸ்கருக்கு இவர் பரிந்துரைக்கப் பட்டிருக்கிறார். லண்டனில் வசித்து வந்த அவருக்கு நேற்று முன் தினம் நெஞ்சு வலி ஏற்பட்டது. உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந் தார்.  இதை அவர் மனைவி பென் டெல்மேஜ், மகன் சைமன் ஆகியோர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

நடிகர் ஆல்பர்ட் மறைவுக்கு ஹாலிவுட் திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.