ஓப்பன் ஹெய்மர்
ஓப்பன் ஹெய்மர் புதிய தலைமுறை
சினிமா

கோல்டன் குளோப் விருதுக்கு பல்வேறு பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்ட ஓப்பன் ஹெய்மர்!

PT WEB

கோல்டன் குளோப் விருதுக்கு ஓப்பன்ஹெய்மர்(OPENHEIMER), பார்பி திரைப்படங்கள் பல்வேறு பிரிவுகளில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன. ஆஸ்கர் விருதுகளுக்கு அடுத்து உயரிய விருதாக கோல்டன் குளோப் விருது கருதப்படுகிறது.

இதன் 81ஆவது விருது வழங்கும் விழா அடுத்த ஆண்டு நடைபெறும் நிலையில், அதற்கான பரிந்துரைப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் சிறந்தபடம், சிறந்த இயக்குநர், சிறந்த நடிகர், சிறந்த திரைக்கதை, உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் ஓப்பன்ஹெய்மர் திரைப்படம் இடம்பெற்றுள்ளது.

உலகப்புகழ் பெற்ற இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில், இந்த திரைப்படம் வெளியானது. அணுகுண்டுவின் தந்தை என்றழைக்கப்படும் விஞ்ஞானி ஓப்பன்ஹெய்மரை (OPENHEIMER) மையமாக வைத்து இந்தத் திரைப்படம் எடுக்கப்பட்டது.இதேபோல், ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற பார்பி திரைப்படமும், கோல்டன் குளோப் விருதுக்கு பல்வேறு பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.