சினிமா

கேரளாவின் உயரிய ஓ.என்.வி இலக்கிய விருது: வைரமுத்துவை நேரில் வாழ்த்திய முதல்வர் ஸ்டாலின்

sharpana

கேரளாவின் மிக உயரிய விருதான ஓஎன்வி விருதிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள கவிஞர் வைரமுத்துவிற்கு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் இலக்கியத்திற்கு வழங்கப்படும் உயரிய விருதான ஞானபீட விருது விருது பெற்ற கேரளாவின் பிரபல இயலக்கியவாதியும் தேசிய விருது பெற்ற பாடலாசிரியருமான ஓ.என்.வி குறுப் பெயரில், அவர் இறப்புக்குப்பின் (2016), கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் இலக்கியத்திற்காக சிறந்த பங்களிப்பை செய்து வருபவர்களுக்கு ஓ.என்.வி விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று ஓஎன்வி குறுப்பின் பிறந்தநாளையொட்டி இந்த ஆண்டுக்கான விருதுக்கு கவிஞர் வைரமுத்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மூன்று லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசைக் கொண்ட இவ்விருதை பெரும் மலையாளி அல்லாத முதல் இலக்கியவாதி கவிஞர் வைரமுத்து என்பது  குறிப்பிடத்தக்கது.

அவருக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் வாழ்த்துகள் குவிந்து வரும் நிலையில், கவிஞர் வைரமுத்துவுக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் கோபாலபுர இல்லத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இன்று வைரமுத்துவை சந்தித்த அவர், “கேரளாவின் புகழ்பெற்ற ஓ.என்.வி விருதுக்குத் தேர்வு செய்யப்பட்ட 'கவிப்பேரரசு' அவர்களை, முத்தமிழறிஞர் கலைஞரின் கோபாலபுரம் இல்லத்தில் வாழ்த்தினேன்.தமிழுக்குப் பெருமை சேர்த்திடும் கவிப்பேரரசுவின் இலக்கியப் பயணம், எல்லைகளைக் கடந்து உலகளாவிய விருதுகளையும் பெற்றுத் தொடரட்டும்” என்று பாராட்டியுள்ளார்.