சினிமா

நடிகர் விஜய் சேதுபதி மீது ஆன்லைன் மூலமாக இந்து மக்கள் முன்னணி புகார்!

நடிகர் விஜய் சேதுபதி மீது ஆன்லைன் மூலமாக இந்து மக்கள் முன்னணி புகார்!

webteam

நடிகர் விஜய் சேதுபதி மீது ஆன்லைன் மூலமாக இந்து மக்கள் முன்னணி அமைப்பாளர் நாராயணன் புகார் அளித்துள்ளார்

கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று இந்து மதத்தை அவதிக்கும் வகையில் நடிகர் விஜய் சேதுபதி பேசியதாகவும், அது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் பரவி வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் விஜய் சேதுபதி மீது ஆன்லைன் மூலமாக இந்து மக்கள் முன்னணி அமைப்பாளர் நாராயணன் புகார் அளித்துள்ளார். பொது அமைதிக்கு குந்தகம் விளைக்கும் வகையில் நடிகர் விஜய் சேதுபதி பேசி உள்ளார் என்றும், அவர் மீது சட்டப்படி காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஆன்லைன் மூலமாக காவல்துறை ஆணையர் அலுவலகத்திற்கு இந்து மக்கள் முன்னணி புகார் அளித்துள்ளது.