சிறையில் உள்ள சினிமா பைனான்சியர் போத்ரா மீது மேலும் ஒரு கந்துவட்டி புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
சென்னையைச் சேர்ந்த தங்க வியாபாரி ஹானந்தர் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஒரு புகார் கொடுத்துள்ளார். ஹானந்தர் தனது புகார் மனுவில் கடந்த 2015ம் ஆண்டு போத்ராவிடம் 5 லட்சம் ரூபாய் கடனாகப் பெற்றதாகவும், அதனை வட்டியுடன் திருப்பிச் செலுத்திய நிலையில், 2 கோடியே 75 லட்சம் ரூபாய் கேட்டு போத்ரா மிரட்டல் விடுத்ததாகவும் மனுவில் கூறியுள்ளார்.
புகார் குறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே படத்தயாரிப்பாளர், ஓட்டல் அதிபர் கொடுத்த கந்து வட்டி புகாரில் கைது செய்யப்பட்டுள்ள போத்ரா தற்போது சிறையில் உள்ளார். இதே வழக்கில் போத்ராவின் இரு மகன்களும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.