சினிமா

சாத்தான்குளம் சம்பவம்: நடிகர் சாந்தனு ட்விட்டரில் கருத்து

சாத்தான்குளம் சம்பவம்: நடிகர் சாந்தனு ட்விட்டரில் கருத்து

PT

சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக திரைப்பட நடிகர் ஷாந்தனு பாக்கியராஜ் கருத்து தெரிவித்துள்ளார். 

சாத்தான்குளத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னீஸ் ஆகியோர் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இதனையடுத்து சம்பந்தப்பட்ட இரு காவல் ஆய்வாளர்கள் தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த மதுரை உயர்நீதி மன்றம் இந்த வழக்கில் உரிய நீதி வழங்கப்படும் எனக் கூறியுள்ளது. இந்த உயிரிழப்புச் சம்பவத்திற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் திரைப்பட நடிகர் ஷாந்தனு பாக்கியராஜூம் இது குறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் “ இதை மறைக்க வேறு செய்திகள் இருக்கும் .. உருவாக்கப்படும் ... ஆனால் ... ஒரு முறை உருவாக்கப்பட்ட கருப்பு புள்ளி எப்போதும் கருப்பு புள்ளியாகவே இருக்கும்.  உயிரிழந்தவரின்  குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்” என பதிவிட்டுள்ளார். அத்துடன் தனது புரோபைல் புகைப்படத்தையும் ட்விட்டரில் மாற்றியுள்ளார்.