தெலுங்கு சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர், நாக சைதன்யா. இவர், நடிகை சமந்தாவை கடந்த 2017ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். எனினும், தவிர்க்க முடியாத காரணங்களால் இருவரும் திருமண வாழ்வில் இருந்து பிரிவதாக முறையே அறிவித்தனர். இதனையடுத்து நடிகர் நாக சைதன்யா மற்றும் நடிகை சோபிதா துலிபலாவை திருமணம் செய்யவுள்ளார் என்று நடிகர் நாகார்ஜுனா தெரிவித்திருந்தார். அதன்படி, நாக சைதன்யாவுக்கு சோபிதா துலிபாலாவுடன் நேற்று பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது. அவர்களின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. தவிர, பலரும் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், நடிகை சமந்தா தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு சிறுவனும், சிறுமியும் மல்யுத்த சண்டை போடும் வீடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ளார். அத்துடன், “ஒரு பெண்போல சண்டை செய் (FIGHT LIKE A GIRL)” எனப் பதிவிட்டுள்ளார். முதலில், இந்த வீடியோவை ஹாலிவுட் பிரபலம் ஐகான் வயோலா டேவிஸ் பகிர்ந்திருந்தார். அப்போது அவர், ”ஒரு பூவைப் போல உடையக்கூடியது அல்ல, வெடிகுண்டு போல உடையக்கூடியது #FightLikeAGirl” எனப் பதிவிட்டிருந்தார். தற்போது, அதை சமந்தா மறுபதிவு செய்துள்ளார். நாக சைதன்யாவின் மறுமணத்தையொட்டித்தான் அவர் இப்படி பதிவிட்டிருப்பதாக பயனர்கள் கருத்து பதிவிடுகின்றனர்.