Pradeep Ranganathan Dude
சினிமா

'தம்பி First Step மட்டும் தான்டா கஷ்டம்.,' 5 நாளில் சாதனை படைத்த `DUDE'| `Box Office' Report

'டியூட்' திரைப்படத்தின் பாக்ஸ் ஆஃபீஸ் வசூலை படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

PT WEB

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நாயகன் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் தீபாவளியை முன்னிட்டு கடந்த வெள்ளிக்கிழமை வெளியான திரைப்படம் தான் 'டியூட்'. ஏற்கனவே பிரதீப்பின் 'லவ் டுடே' மற்றும் 'டிராகன்' ஆகிய திரைப்படங்களின் வெற்றியைத் தொடர்ந்து 'டியூட்' திரைப்படத்தின் பாக்ஸ் ஆஃபீஸ் வசூலை படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

Keerthiswaran

இயக்குனர் சுதா கொங்குராவின் உதவி இயக்குனாராக பணியாற்றிய கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'டியூட்' படத்தில், மமிதா பைஜூ, சரத்குமார் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். நடிகர் பிரதீப் ரங்கநாதனின் திரைப்படங்கள் இன்றைய காலகட்டத்தில் நடந்து வரும் காதல் அதனை சுற்றி வரும் கதாநாயகனின் வாழ்க்கை என காமெடி, செண்டிமெண்ட், எமோஷன் என அனைத்தும் கலந்த கலவையான ஒரு கதையாக இருந்து வந்தது. அதே போல் தான் 'டியூட்' திரைப்படமும் அமைத்திருக்கிறது.

மேலும், Gen Z கிட்ஸ்களை கவர்ந்த நடிகர் பிரதீப் ரங்கநாதன் குறைந்த பட்ஜெட்டில் அதிக வசூல் ஈட்டும் படங்களை திரைப்படங்களை கொடுப்பதால் அவரை வைத்துப் படமெடுக்கத் தயாரிப்பாளர்கள் ஆர்வமாக காட்டி வருகின்றனர்.

அதுமட்டுமில்லாமல், சாதியவாதிகளுக்கும், பிற்போக்குச் சிந்தனை கொண்டவர்களுக்கும் எதிரான ஒரு விஷயத்தை கமர்ஷியல் சினிமாவில் கையாண்டிருப்பதால் Gen Z கிட்ஸ் 'டியூட்'-ஐ கொண்டாடி வருகின்றனர். இசையமைப்பாளர் சாய் அபியங்காரின் இசை இளசுகளையும் Gen Z கிட்ஸையும் வெகுவாக கவர்ந்திருக்கிறது. ஒருபுறம் 'பைசன்', 'டீசல்' போன்ற திரைப்படங்கள் வெளியாகியிருந்தாலும், கமர்ஷியல் சினிமாவை விரும்பும் ரசிகர்களின் முதன்மைத் தேர்வாக 'டியூட்' படமே இருக்கிறது.

Dude

'டியூட்' திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வந்தாலும் வசூல் ரீதியாக Box Office-ல் பட்டையை கிளப்பி வருகிறது. அதன்படி முதல் நாளில் ரூ.22 கோடியை வசூலித்ததாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்தது. இரண்டாவது நாளையும் சேர்த்து ரூ.45 கோடியை வசூலித்ததாக அறிவிக்கப்பட்டது. மூன்றாவது நாளில் ரூ.66 கோடியும் நான்காவது நாளாக ரூ.83 கோடியும் 5வது நாளாக ரூ.95 கோடியை வசூலித்து Box Office-ல் சாதனை படைத்து வருகிறது.

ஏற்கனவே பிரதீப் ரங்கநாதனின் லவ் டுடே, டிராகன் ஆகிய படங்கள் ரூ.100 கோடியை வசூலித்ததை தொடர்ந்து ‘டியூட்’ ரூ.100 கோடியை வசூலித்தால் ஹாட்ரிக் ரூ.100 கோடி வசூல் நாயகன் என்ற சாதனையை படைப்பார் பிரதீப் ரங்கநாதன். அதுமட்டுமில்லாமல், ரூ.25 முதல் ரூ.30 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் ரூ.100 கோடியை நோக்கி செல்வது அவரது காமர்சியல் மார்க்கெட்டையும் உயர்த்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள ‘LIK’ படத்தில் நடித்துள்ளார் பிரதீப். இந்தப் படம் வரும் டிசம்பர் 18-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.