ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் விஜய் 62 படம் ஜனவரியில் தொடங்க இருப்பதாக உறுதியான தகவல் வெளியாகியுள்ளது.
தற்சமயம் அட்லி இயக்கத்தில் விஜய் மெர்சல் படத்தில் நடத்து வருகிறார். அவரை அடுத்து இயக்கப் போவது யார் என்பது மிகப்பெரிய விஷயமாக பேசப்பட்டது. நிச்சயம் முருகதாஸ்தான் இயக்குவார் என நம்பத் தகுந்த செய்திகள் வெளி வந்தன. ஆனால் விஜய் வட்டாரம் இது சம்பந்தமாக கருத்து எதுவும் கூறவில்லை.
இதையொட்டி முருகதாஸ் கதையோடு தயாராக காத்திருக்கிறேன் என்று குறிப்பிட்டிருந்தார். விஜய் அழைத்தால் அடுத்த நாளே ஷூட்டிங் போக ரெடி என்று பேசி வந்தார். அப்பொழுது விஜய்யை இயக்குவது உறுதியா என கேட்டால் அதை விஜய்தான் அறிவிக்க வேண்டும் என நழுவினார். இப்பொழுது அட்லியின் படம் விரைவில் வெளிவர இருப்பதால் விஜய் 62 பற்றிய தகவல் கசிந்துள்ளது. அதன் படி ஜனவரி மாதம் முருகதாஸ் படப்பிடிப்பை தொடங்க இருக்கிறார் என்று கூறப்படுகிறது.
அப்புறம் என்ன? விஜய் ரசிகர்களுக்கு இனி ஆல் இஸ் வெல் தான்.