சினிமா

திரையரங்கில் மட்டும் தேசிய கீதத்தை ஏன் கட்டாயப்படுத்துகிறீர்கள்? அரவிந்த்சாமி கேள்வி

திரையரங்கில் மட்டும் தேசிய கீதத்தை ஏன் கட்டாயப்படுத்துகிறீர்கள்? அரவிந்த்சாமி கேள்வி

webteam

திரையரங்கில் மட்டும் தேசிய கீதம் ஏன் கட்டாயப்படுத்தபட வேண்டும் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் அரவிந்த்சாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

திரையரங்குகளில், தேசிய கீதம் கட்டாயமாக ஒலிபரப்ப வேண்டும், அப்போது, பொதுமக்கள் எழுந்து நிற்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கடந்த நவம்பர் மாதம் அறிவித்தது. இந்த உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. திரையரங்குகளில் தேசிய கீதம் தொடர்ந்து வாசிக்கப்பட வேண்டுமா, வேண்டாமா என்பதை அரசு முடிவு செய்ய அறிவுறுத்திய நீதிபதிகள் ஜனவரி 9-ம் தேதிக்குள் புதிய விதிகளை உருவாக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.
இந்த நிலையில் நடிகர் அரவிந்த்சாமி தனது ட்விட்டர் பக்கத்தில் “தேசிய கீதம் பாடும் போது நான் எப்போதும் எழுந்து நிற்கிறேன். கூடவே நானும் சேர்ந்து பாடுகிறேன். நான் இதை பொருமையேடு கடைப்பிடிக்கிறேன். ஆனால் ஒன்று புரியவில்லை. சினிமா திரையரங்குகளில் மட்டும் ஏன் இதை கட்டாயப்படுத்துகிறார்கள்? அரசு அலுவலங்களில், நீதிமன்றங்களில், பாராளுமன்ற அவைகளில், சட்டப்பேரவையில் ஏன் இதை செய்வதில்லை?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்