இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் சுயசரிதைப் புத்தகம் 'Notes of a dream' எனும் பெயரில் விரைவில் விற்பனைக்கு வரவுள்ளது.
1992ம் ஆண்டு தமிழில் வெளியான 'ரோஜா' திரைப்படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகி பல்வேறு சாதனைகளைப் படைத்தவர் ஏ.ஆர்.ரஹ்மான். பாலிவுட், ஹாலிவுட் எனப் பல மொழித் திரைப்படங்களிலும், இசை ஆல்பங்களிலும் பணியாற்றி கோல்டன் க்ளோப், ஆஸ்கர் என பலசர்வதேச விருதுகளையும் வென்று பெருமை சேர்த்திருக்கிறார்.
இந்நிலையில், கிருஷ்ணா த்ரிலோக் எழுதியுள்ள இவரது சுயசரிதை 'Notes of a dream' எனும் பெயரில் விற்பனைக்கு வரவுள்ளது. இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள ஏ.ஆர்.ரகுமான், "இத்தனை ஆண்டுகளாக இசை மூலமாக என்னை தெரிந்து கொண்ட நீங்கள், நான் யாரென படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.