சினிமா

பிரபாஸ் படத்திலிருந்து நீக்கப்பட்ட அனுஷ்கா!

பிரபாஸ் படத்திலிருந்து நீக்கப்பட்ட அனுஷ்கா!

webteam

பாகுபலியில் நடித்த அனுஷ்காவும்., பிரபாஸும் பொறுத்தமான ஜோடி. இருவரும் நிஜத்திலும் திருமணம் செய்து கொள்ளப்போகிறார்கள் எனக் கூறப்பட்டு வந்தது.
இந்நிலையில் அடுத்த படமான சாஹோவிலும்  பிரபாஸூக்கு ஜோடியாக நடிக்க இருந்தார் அனுஷ்கா. ஆனால், அந்தப்படத்தில் இருந்து தற்போது நீக்கப்பட்டிருக்கிறார் அவர். சுஜீத் ஷெட்டி இயக்கும் இந்தப்படத்தில் பிரபாஸுடன் நடிக்க முன்பு அனுஷ்காவை ஒப்பந்தம் செய்திருந்தனர். ஆனால் தற்போது அவரை நீக்கி விட்டு ஹிந்தி நடிகையான சோனம் கபூரை ஒப்பந்தம் செய்துள்ளனர். முன்னதாக ஹிந்தி நடிகைகளான ஷரத்தா கபூர், திஷா பதானி, பூஜா ஹெக்டே ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு இறுதியாக சோனம் கபூரை தேர்வு செய்துள்ளனர். 
அதிக எடையால் அவதிப்பட்டு வந்த அனுஷ்கா உடல் எடையைக்  குறைக்க வெளிநாடு செல்லத் திட்டமிட்டுள்ளார். இதனால், தாமதம் ஏற்படுவதால் அந்தப்படத்தில் இருந்து அவல் விலக்கப்பட்டாதாக கூறப்படுகிறது.