சினிமா

குடித்துவிட்டு‌ கார் ஓட்டி விபத்து: நடிகர் ஜெய்க்கு‌ பிடி ஆணை

குடித்துவிட்டு‌ கார் ஓட்டி விபத்து: நடிகர் ஜெய்க்கு‌ பிடி ஆணை

webteam

குடித்துவிட்டு கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய வழக்கில் நடிகர் ஜெய்க்கு‌ பிடி ஆணை பி‌றப்பித்து சென்னை சைதாப்பேட்டை நீதிமன்‌றம்‌ உத்தரவிட்டுள்ளது.

கடந்த 21ஆம் தேதி‌ நடிகர் ‌ஜெய், சென்னை அடையாறு பாலத்தின் பக்கச் சுவரில் தனது ஆடி காரை மோதி விபத்து ஏற்படுத்தினார். ‌அப்போது அவர் குடிபோதையில் இருந்துள்ளார். கைது‌ செய்யப்பட்ட அவர் பிறகு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்த வழக்கு சைதாப்பேட்டை 4வது நீதிமன்றத்தில் கடந்த 3 ஆம்‌ தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது ஆ‌ஜரான ஜெய்க்கு குற்றப்பத்திரிக்கை நகல் வழங்கப்பட்டது. இதனையடுத்து 5ஆம் தேதிக்கு விசாரணை ஒத்தி‌வைக்கப்பட்டது. இந்நிலையில் நேற்றைய விசாரணையின்போது ஜெய் ஆஜராகவில்லை. இதனால் அவருக்கு பிடி ஆணை பிறப்பித்து நீதிபதி ஆப்ரகாம் லிங்கன் உத்தரவிட்டார். இ‌ன்று மீண்டு‌ம் இவ்வழக்கு விசாரணக்கு வர உள்ளது.