சினிமா

“ஆக்ஸ்ஃபோர்டிற்கு வாருங்கள் ஷாரூக்கான் ” - மலாலா அழைப்பு

“ஆக்ஸ்ஃபோர்டிற்கு வாருங்கள் ஷாரூக்கான் ” - மலாலா அழைப்பு

webteam

ஒருநாள் நீங்கள் நிச்சயம் ஆக்ஸ் ஃபோர்டு பல்கலைக்கழகத்துக்கு வருகை தர வேண்டும் என ஷாரூக்கானுக்கு மலாலா அழைப்பு விடுத்துள்ளார்.

ஆனந்த எல் ராய் இயக்கத்தில் குள்ளமனிதன் கதாபாத்திரத்தில் இந்தி நடிகர் ஷாருக்கான் நடித்துள்ள படம் ‘ஸீரோ’. இந்தப்படம் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டுள்ளது.  200 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் அனுஷ்கா ஷர்மா, கத்திரினா கைஃப் இருவரும் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்துள்ளனர். ஷாருக்கானின் மனைவி கௌரி கான் தயாரித்துள்ளார்.

இப்படத்தில் சல்மான் கான், கஜோல், தீபிகா படுகோனே, ராணி முகர்ஜி, மறைந்த ஸ்ரீதேவி, அலியா பட், கரிஷ்மா கபூர், மாதவன் ஆகியோர் சிறப்புத் தோற்றங்களில் நடித்துள்ளனர். நீண்ட நாட்களுக்கு பிறகு இந்தத் திரைப்படம் ஷாரூக்கானுக்கு வெற்றிப்படமாக அமையும் என சினிமா ரசிகர்கள் எதிர்பார்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் தான் ‘ஸீரோ’ படத்தை பார்த்து மகிழ்ந்ததாக மலாலா தெரிவித்துள்ளார். நேற்று தனது குடும்பத்துடன் திரைப்படத்தை பார்த்து ரசித்ததாக மலாலா தெரிவித்துள்ளார். மேலும் கூறியுள்ள அவர், “ஹலோ ஷாரூக்கான், உங்களை நான் திரையில் பார்த்தது மகிழ்ச்சி. எனக்கு மட்டுமல்ல எனது குடும்பத்துக்கும் உங்களது படம் மகிழ்ச்சியாகவும், பொழுதுபோக்காவும் இருந்தது” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் நான் உங்களது மிகப்பெரிய ரசிகை. ஒருநாள் நீங்கள் நிச்சயம் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்துக்கு வருகை தர வேண்டும். அல்லது இங்கிலாந்துக்கு எங்கு வேண்டுமானாலும் வாருங்கள். உங்களை நான் சந்திக்க வேண்டும். அந்த நாளுக்காக நான் காத்திருக்கிறேன். எல்லாரும் சொல்லி இருப்பார்கள், ஆனாலும் நானும் சொல்கிறேன். நீங்கள் சிறந்தவர், அற்புதமானவர் என்று தெரிவித்துள்ளார்.

மலாலா ஏற்கெனவே ஷாரூக்கானை ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்துக்கு வருகை தர வேண்டுமென அழைப்பு விடுத்திருந்த நிலையில் மீண்டும் ஒருமுறை அவருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.