சினிமா

ஜேம்ஸ்பாண்ட் படத்தின் முதல் போஸ்டர் வெளியீடு!

webteam

ஜேம்ஸ்பாண்ட் படத்தின் முதல் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் சமூக வலைத்தளங்களில் பலத்த வரவேற்பை பெற்றுள்ளது.

ஜேம்ஸ்பாண்ட் படங்களுக்கு உலகம் முழுவதும் வரவேற்பு இருக்கிறது. இயான் ஃபிளமிங்க் நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட, பாண்ட் கேரக்டர் படங்கள், வசூலிலும் சாதனை படைக்கிறது. பாண்ட் பட வரிசையின் 25 வது படம் இப்போது உருவாகியுள்ளது.

தொடர்ந்து நான்கு படங்களில் ஜேம்ஸ்பாண்ட்-ஆக நடித்த டேனியல் கிரேக் இந்தப் படத்தில் இருந்து விலகுவதாக முதலில் அறிவித்திருந்தார். அவருக்குப் பதிலாக கறுப்பினத்தைச் சேர்ந்த இட்ரிஸ் எல்பா நடிப்பதாகக் கூறப்பட்டது. இந்நிலையில் டேனியல் கிரேக் மீண்டும் நடித்துள்ளார். ’ஸ்லம்டாக் மில்லினர்’ படத்தை இயக்கிய டேனி பாய்ல் இதை இயக்குவதாக அறிவிக்கப்பட்டது. படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் சில மாதங்களாக நடந்து வந்த நிலையில், கருத்து வேறுப்பாடு காரணமாக, அவர் வெளியேறினார்.

இதையடுத்து கேரி புகுனகா (Cary Fukunaga) இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே விக்டோரியா பாரா சைனோ, சின் நோம்ப்ரே, ஜானே ஐரே, பீட்ஸ் ஆப் நோ நேஷன் ஆகிய படங்களை இயக்கியுள்ளார். டேனியல் கிரேக்குடன் ரால்ப் பியென்னஸ், நவோமி ஹாரிஸ், ராமி மலேக், ஜெஃப்ரி ரைட் உட்பட பலர் நடிக்கின்றனர். 

இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டது. படத்துக்கு ’நோ டைம் டு டை’ (No Time to Die ) என்று டைட்டில் வைத்துள்ளனர். அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் படம் வெளியாக இருக்கிறது.