தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் நடிக்கும் ஆசை இல்லை என்று இந்தி நடிகை கரீனா கபூர் கூறியுள்ளார்.
இதுபற்றி அவர் கூறும்போது, ’தமிழ், தெலுங்கு, மலையாளத் திரைப்படங்கள் மீது மரியாதை வைத்திருக்கிறேன். நல்ல கதைகளுடன் அங்கு படங்கள் உருவாகின்றன. ரஜினிகாந்த், மம்மூட்டி, பவன் கல்யாண் போன்ற சிறந்த நடிகர்கள் அங்கு இருக்கிறார்கள். மொழி தெரியாத படங்களில் நடிப்பதில் எனக்கு விருப்பவில்லை. அதனால் தென்னிந்திய படங்களில் நடிக்கும் ஆசை இல்லை. மணிரத்னம் இயக்கத்தில் ’யுவா’ படத்தில் நடித்ததை பெருமையாக கருதுகிறேன்’என்றார் கரீனா கபூர்.