தெலுங்கு சினிமாவில் நடிகை நிவேதா தாமஸ் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருவதாக, நடிகர் ராணா பாராட்டு தெரிவித்துள்ளார்.
தமிழில், ’போராளி’, ’நவீன சரஸ்வதி சபதம்’, கமல்ஹாசனின் ’பாபநாசம்’ படங்களில் நடித்தவர் மலையாள நடிகை நிவேதா தாமஸ். இவர் இப்போது தெலுங்கிலும் நடித்துவருகிறார். இவர், நானி, ஆதி, ராணா ஆகியோருடன் நடித்துள்ள படம், 'நின்னுகோரி'. ஷிவா நிர்வாணா இயக்கியுள்ள இந்தப் படம் நாளை திரைக்கு வருகிறது. படம் குறித்து கருத்து தெரிவித்துள்ள ராணா, நானி, நிவேதா தாமஸ் மற்றும் ஆதி ஆகியோரின் நடிப்பைப் பாராட்டியுள்ளார். அவர்களைப் போன்ற சிறந்த நடிகர்களுடன் நடித்தது குறித்து பெருமை கொள்வதாகவும் ராணா கருத்துத் தெரிவித்துள்ளார். தெலுங்கு சினிமா சமீபத்தில் கண்டுபிடித்த சிறந்த நடிகை நிவேதா தாமஸ் என்றும் ராணா புகழ்ந்துள்ளார்.