சினிமா

பிரியங்காவுடன் காதலில் விழுந்தது எப்படி? மனம் திறந்தார் நிக் ஜோனாஸ்!

பிரியங்காவுடன் காதலில் விழுந்தது எப்படி? மனம் திறந்தார் நிக் ஜோனாஸ்!

webteam

பிரியங்கா சோப்ராவுடன் காதலில் விழுந்தது எப்படி என்று அவரது காதலர் நிக் ஜோனாஸ் விளக்கமளித்துள்ளார்.

தமிழில் விஜய்யின் ’தமிழன்’ படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர் பிரியங்கா சோப்ரா. பின்னர் இந்தியில் நடித்த அவர், அங்கு முன்னணி நடிகையானார். இப்போது ஹாலிவுட் படங்களிலும் தொடர்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் தன்னை விட பத்து வயது குறைந்த பாப் பாடகரும் நடிகருமான நிக் ஜோனாஸை அவர் காதலித்தார். இவர்களின் திருமண நிச்சயதார்த்தம் ஜூலை மாதம் முடிந்துவிட்டது.

நிச்சயதார்த்ததுக்கு லண்டனில் உள்ள பிரபலமான நகைக்கடையில் நிக், 2 லட்சம் அமெரிக்க டாலர் மதிப்பில் மோதிரம் வாங்கியதாக கூறப்பட்டது. இவர்களது நிச்சயதார்த்த விருந்து மும்பை ஜுஹூவில் உள்ள பிரியங்கா சோப்ராவின் வீட்டில் நடந்தது. இதில் நெருங்கிய உற வினர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். இந்நிலையில் பிரியங்காவுடன் காதலில் விழுந்தது எப்படி என்பது பற்றி நிக் ஜோனாஸ் தெரிவித்துள் ளார். 

‘ஒரு நண்பர் மூலமாகத்தான் பிரியங்கா எனக்கு அறிமுகம். போன் நம்பர் வாங்கிக்கொண்டோம். முதலில் மெசேஜ்தான் அனுப்பிக்கொண்டிருந் தோம். நேரடியாக  சந்தித்ததும் இல்லை. ஆறு மாதத்துக்குப் பின் ஒரு விழாவுக்கு இருவரும் சென்றோம். அங்கு நாங்கள் இனிமையாகப் பொழு தைக் கழித்தோம். பிறகு இருவரும் ஒன்றாக வெளியே சுற்றினோம். பின் மீடியா, எங்கள் நட்பைக் கேள்வி கேட்டது. அப்போதும் நாங்கள் நண்பர் களாகத்தான் இருந்தோம். தொடர்ந்து கேட்டது, எழுதியது. இப்போது நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதால், எழுதிய கதை முடிந்துவிட்டது. எங்க ள் காதலை, அதுவே கதையாக எழுதிக் கொண்டது. இந்தியாவில் பிரியங்கா வீட்டில் நடந்த சடங்கில் ஆன்மிக அனுபவத்தை உணர்ந்தேன்’ என்று தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே நியூயார்க்கில் நடந்த பேஷன் ஷோ ஒன்றில் பிரியங்காவும் நிக் ஜோனாஸும் கலந்துகொண்ட புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றனர்.