சினிமா

கடலுக்குள் நிவின்பாலி- த்ரிஷா ஜோடி: வீடியோ

கடலுக்குள் நிவின்பாலி- த்ரிஷா ஜோடி: வீடியோ

Rasus

நிவின் பாலியும்- த்ரிஷாவும் படகு ஒன்றில் கடலில் செல்லும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன. இது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

மலையாளத்தில் ‘இவடே’படத்திற்கு பிறகு இயக்குநர் ஷியாமா பிரசாத் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘ஹேய் ஜூட்’. இதில் ஹீரோவாக ‘ப்ரேமம்’ புகழ் நிவின் பாலி நடிக்கிறார். நிவின் பாலிக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார். த்ரிஷா மலையாளத்தில் கால்பதிக்கும் முதல் படம் இதுவாகும். படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நிவின் பாலியும்- த்ரிஷாவும் படகு ஒன்றில் கடலில் செல்லும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன. வீடியோவில் இருவரும் சிரித்தப்படி பேசிக்கொள்கிறார்கள். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது. இது ‘ஹேய் ஜூட்’படப்பிடிப்பிற்காக இருவரும் கடலில் சென்றபோது வெளியான காட்சிகள் என்றும் கூறப்படுகிறது.